தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

60 0

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவ படைகள் குவிக்​கப்​பட்​டுள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இந்​தத் தேர்​தலில் மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். வாக்​குப் பதிவு நாளை நடை​பெறும் நிலை​யில், நேற்று மாலை 6 மணி​யுடன் பிரச்​சா​ரம் ஓய்ந்​தது. சென்னை கொளத்​தூரில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், சேலம் எடப்​பாடி​யில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, சென்னை நந்​தனத்​தில் தவெக தலை​வர் விஜய், ஸ்ரீபெரும்​புதூரில் தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, சென்னை மயி​லாப்​பூரில் தமிழிசை சவுந்​தர​ராஜன், சாத்​தூரில் நயி​னார் நாகேந்​திரன், தரு​மபுரி​யில் பாமக தலை​வர் அன்​புமணி, சென்னை எழும்​பூரில் சசிகலா, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், காரைக்​குடி​யில் நாதக மாநில ஒருங்​கிணைப்​பாளர் சீமான், சென்​னை​யில் ஜி.கே.​வாசன் ஆகியோர் தங்​கள் இறு​திக்​கட்ட பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​தனர்.

தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைந்த நிலை​யில், அந்த நேரத்​தில் இருந்து நாளை வாக்​குப்​ப​திவு நிறைவடை​யும் மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேரத்தை அமைதி கால​மாக தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. இந்த அமைதி காலத்​தில் தேர்​தல் தொடர்​பான எந்​தப் பொதுக் கூட்​டத்​தையோ, ஊர்​வலத்​தையோ நடத்​த கூடாது. எந்​தத் தேர்​தல் விவ​காரத்​தை​யும், திரைப்​படம், தொலைக்​காட்​சி, எப்​எம் ரேடியோ, வாட்ஸ் அப், முகநூல், டிவிட்​டர் போன்ற அல்​லது இது​போன்ற சாதனம் வாயி​லாகப் பொது மக்​களின் பார்​வைக்கு வைக்​கக் கூடாது.

தொகு​திக்கு வெளியே இருந்து அழைத்து வரப்​பட்ட அனைத்து அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், கட்​சிப் பணி​யாளர்​கள் மற்​றும் அத்​தொகு​தி​யின் வாக்​காளர்​ அல்​லாதோர், அத்​தொகு​தியை விட்டு வெளி​யேற வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழகம் முழுதும் திருமண மண்​டபங்​கள், தங்​கும் விடு​தி​களில் நேற்று மாலை முதலே போலீ​ஸார் தீவிர சோதனை நடத்​தி,தொகு​திக்கு தொடர்பு இல்​லாதவர்​களை வெளி​யேற்​றும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இந்த 48 மணி நேர அமைதி காலத்தை மது​விலக்கு நாளாக தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. அதனால் நேற்று முதல் நாளை நள்​ளிரவு 12 மணி வரை மதுக்​கடைகள், மதுக்​கூடங்​களை மூட தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்த தேர்​தலில் 5.73 கோடி பேர் வாக்​களிக்க உள்​ளனர். இதற்​காக 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத பணி​யாளர்​களும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். வாக்​குச் சாவடி பணி​யில் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​படு​கின்​றனர்.

தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்த மார்ச் 15-ம் தேதி​யில் இருந்​து, தலா 2,106 பறக்​கும் படைகள், நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் நடத்​திய சோதனை​யில் நேற்று வரை சுமார் ரூ.1,200 கோடிக்கு மேல் ரொக்​கம், மது​பானங்​கள், தங்​கம், வெள்ளி பொருட்​கள் மற்​றும் வாக்​காளர்​களுக்கு வழங்​கு​வதற்​காக கொண்டு செல்​லப்​பட்ட இலவசப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இத்​தேர்​தலில் 234 தொகு​தி​களுக்​கும் 136 பொது பார்​வை​யாளர்​கள், 50 காவல் பார்​வை​யாளர்​கள் மற்​றும் 150 செல​வின பார்​வை​யாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களும் தொடர் கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இன்று காலை 10 மணி முதல் இறு​தி​கட்ட பயிற்​சி​யும், வாக்​குப் பதிவு இயந்​திரங்​களைப் பலத்த பாது​காப்​புடன் அனைத்து வாக்​குச் சாவடிகளுக்​கும் அனுப்​பும் பணி தொடங்​கு​கிறது. வாக்​குப் பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடை​பெறுகிறது.

12 ஆவணங்​கள்: வாக்​காளர் அட்டை இல்​லா​விட்​டால் ஆதார் உள்​ளிட்ட 12 ஆவணங்​களைக் காட்டி வாக்​களிக்​கலாம் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. அதன்​படி, ஆதார் அட்​டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தி​யளிப்​புத் திட்​டப் பணி அடை​யாள அட்​டை, புகைப்​படத்​துடன் கூடிய வங்கி அல்​லது அஞ்​சல​கக் கணக்​குப் புத்​தகங்​கள், ஓட்​டுநர் உரிமம், வரு​மான வரி நிரந்தர கணக்கு எண் அட்​டை, இந்​தி​யக் கடவுச்​சீட்​டு, புகைப்​படத்​துடன் கூடிய ஓய்​வூ​திய ஆவணம், மத்​திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறு​வனங்​கள், வரையறுக்​கப்​பட்ட பொது நிறு​வனங்​களின் தொழிலா​ளர்​களுக்கு வழங்​கப்​பட்ட புகைப்​படத்​துடன் கூடிய பணி அடை​யாள அட்​டைகள், நாடாளு​மன்ற, சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள அடை​யாள அட்​டை, இந்​திய அரசின் சமூக நீதி மற்​றும் அதி​காரமளித்​தல் அமைச்​சகத்​தால் வழங்​கப்​பட்ட இயலாமைக்​கான தனித்​து​வ​மான அடை​யாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை காண்​பித்து வாக்​களிக்​கலாம்.

வாக்கு எண்​ணிக்கை: வாக்​குப் பதிவு நிறைவடைந்த பின், அனைத்து வாக்​குப் பதிவு இயந்​திரங்​களும், பாது​காப்​பாக வாக்கு எண்​ணும் மையங்​களுக்கு கொண்டு செல்​லப்பட உள்​ளன. மேற்கு வங்​கத்​தில் நாளை முதல் கட்​டத் தேர்​தல் நடை​பெறுகிறது.

இரண்​டாவது மற்​றும் கடைசிக் கட்​டத் தேர்​தல் ஏப்​.29-ம் தேதி நடை​பெறுகிறது. அதன்​பின், மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை நடை​பெறுகிறது. அப்​போது, தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, அசாம்​, மேற்​கு வங்​கம்​ ஆகிய 5 மாநிலங்​களுக்​கும்​ சேர்த்​து ​வாக்​கு எண்​ணிக்​கை நடைபெறுகிறது.

Related Post

தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்

Posted by - March 25, 2026 0
 கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எவையும் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் விவரத்தை அதிமுக…

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Posted by - November 17, 2025 0
அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை…

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…

தமிழக சட்டப்பேரவை கூடியது: கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அஞ்சலி

Posted by - October 14, 2025 0
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்.14) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின்…

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

Posted by - January 2, 2026 0
அரசு ஊழியர்கள் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *