ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம்

240 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார் தொடங்கி உள்ளனர். ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம் |  Tamil News Andhra Pradesh, a new scheme to escort women home at night will  see karate-trained female police escorts

இந்த திட்டத்தின் படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வேலை உள்ளிட்ட காரணங்களால் தனியாக பயணம் செய்யும் பெண்களை பாதுகாப்பாக போலீசார் வீட்டில் கொண்டு போய் இறக்கி விடுவார்கள்.

இரவு நேரங்களில் 100, 112, 29 51 75 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு போன் செய்தால் போதும், சம்பவ இடத்திற்கு பெண் காவலர்கள் பைக்கில் வருவார்கள். சம்பந்தப்பட்ட பெண் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவார்கள். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் பணிபுரிய உள்ள பெண் போலீசாருக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரசாந்திக்கு பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

Related Post

முதலீட்டாளர்களே மாதத்தின் கடைசி நாளில் கவனிக்க வேண்டிய பங்குகள்..

Posted by - July 31, 2024 0
இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம்,…

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடம்

Posted by - April 4, 2023 0
புதுடெல்லி : ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023-ம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தமது மகிழ்ச்சி குறித்த மக்களின் சொந்த மதிப்பீடு,…

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

Gpay, Phonepay பயன்படுத்துறீங்களா..? வருது புதிய கட்டுப்பாடுகள்!

Posted by - December 20, 2022 0
இதுவரை எத்தனைமுறை வேண்டுமானாலும் யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பி வந்த நிலையில், தற்போது பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் யுபிஐ ஆப்கள் மூலம் நடைபெறும்…

நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

Posted by - September 21, 2024 0
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *