மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

355 0

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார், மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடப் போவதாகவும், மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்திற்கு தமிழகத்திலுள்ள பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் தற்போது தான் பதவிக்கு வந்துள்ளார். காவேரி பிரச்சனை முழுவதும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவில் பாதிக்கப்படும்.

எந்த ரூபத்திலும்  எந்த பேச்சுவார்த்தையிலும் எந்த சமரசத்திலும் மேகதாது அணை கட்டுவதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது. மேகதாது அணை கட்டுவது என்ற பேச்சு காவேரி நடுவர் மன்றத்தில் வரவில்லை. காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் இந்த பேச்சு வரவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Post

தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?

Posted by - May 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அடுத்த மாதம் வரும் அவருடைய பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்…

ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் லோன் ஆப் செயலியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக , காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்… ஆன்லைன் கடன் செயலி மூலம்…

பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

Posted by - August 27, 2024 0
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர்.…

தேர்தலுக்கு பின் கழகத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - February 23, 2024 0
பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு…

வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகுது கனமழை!

Posted by - November 14, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆங்காங்கே விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் குறைந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *