பெயரை கேட்டாலே எச்சில் ஊறுது: ஆந்திராவில் வினோத ஊறுகாய் கிராமம்

284 0

திருப்பதி:

ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது. தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை. ஊறுகாய் தயாரிப்பு குடிசைத் தொழிலாக பல இடங்களில் செய்யப்படுகிறது.

ஆனால் ஒரு கிராமம் முழுவதும் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஊறுகாய் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தை ஊறுகாய் கிராமம் என்று அழைக்கின்றனர். ஆந்திரமாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உசுலுமறு கிராமம். இங்கு பாரம்பரிய தொழிலாக ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது. இந்த கிராமத்திற்குள் நுழையும்போதே ஊறுகாய் வாசனை துளைக்கிறது.

பெயரை கேட்டாலே எச்சில் ஊறுது: ஆந்திராவில் வினோத ஊறுகாய் கிராமம் | A strange  pickle village in Andhra Pradesh that makes you salivate just hearing the  name

அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஊறுகாய் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. மாங்காய் ஊறுகாய் எலுமிச்சை இஞ்சி, புளி, பச்சை மிளகாய் மற்றும் நெல்லிக்காய் என ஒவ்வொருவரும் தனித்தனியாக ஊறுகாய்களை தயார் செய்து வருகின்றனர். இங்குள்ள சில ஆண்களின் பெயருக்கு அடைமொழியாக ஊறுகாய் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கோதாவரி ஆற்றின் துணை நதியான வசிஷ்டா கரையில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் அங்கு ஊறுகாய்க்கு தேவையான அனைத்து மாங்காய் எலுமிச்சை போன்றவை கிடைக்கின்றன. இதே போல கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அங்கம்பாலம் மற்றும் நற்கடிபள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டுக்கு வீடு ஊறுகாய் தயாரிப்பு நடந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக பிளாஸ்டிக் பைகளிலும், ஆந்திராவுக்கு வெளியேயும் பிற நாடுகளுக்கு மண் ஜாடிகளிலும் ஊறு காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த குடிசைத் தொழில் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை அளிக்கிறது. இதனை 70 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related Post

பெங்களூருவில் ஆன்லைனில் ‘பிரிட்ஜை’ விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த என்ஜினீயர்

Posted by - July 1, 2023 0
பெங்களூரு : பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில்…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

ஒரு தக்காளியின் விலை ரூ.17- வைரலான ‘பில்’

Posted by - August 7, 2023 0
இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது. சில இடங்களில் கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை…

சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம்: பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

Posted by - September 2, 2023 0
புதுடெல்லி: சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும்…

இன்ஸ்டா டூ செப்டிக் டேங்க்..!

Posted by - February 14, 2026 0
திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் குடும்பத்துடன் சேர்ந்து 33 வயது காதலியை கொலை செய்து, உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *