வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சம் வரை திடீர் டெபாசிட்- இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்

322 0

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆனது. வங்கிக் கணக்கில் பணம் வந்தது குறித்து அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.வங்கியில் பணம் எடுத்தாலும் கட்டணம், போட்டாலும் கட்டணம்.. முடிவுக்கு வந்தது  இலவச சேவை! | Banks to Charge For Deposits and Withdrawals From Nov 1 -  Tamil Oneindia

ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர். இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரி பார்த்தனர்.

இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Related Post

Jio-க்கு இனி சிக்கல்.. இந்தியாவில் தனது கடையை விரிக்கும் டாப் பணக்காரர் எலான் மஸ்க்

Posted by - November 9, 2024 0
இந்தியாவின் அம்பானியின் ஜியோ நெட்வொர்க் தான் லீடிங்கில் உள்ள நிலையில் அம்மானிக்குப் போட்டியாக எலான் மஸ்க் இந்திய மார்க்கெட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்தியா மிகப்பெரிய மக்கள்…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

விஸ்வரூபம் எடுத்த கோமியப் பிரச்னை – மன்னிப்பு கோரிய திமுக எம்.பி.! என்ன நடந்தது?

Posted by - December 6, 2023 0
அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை, தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக கூறிய திமுக எம்.பி. 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…

அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - July 10, 2023 0
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு…

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! – மோடி கேரண்டி என்ற பெயரில் தேர்தல் அறிக்கை!

Posted by - April 14, 2024 0
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *