சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

238 0

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை முறைப்படி தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.சென்னையில் 2.79 லட்சம் கட்டடங்களை மறு அளவீடு செய்யும் பணி தொடக்கம்:  கூடுதலாக சொத்து வரி கிடைக்க வாய்ப்பு | possibility of additional property  tax for the Chennai ...

சென்னை மாநகராட்சி தான் வசூலிக்கும் சொத்துவரி மூலம் மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தூய்மை பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், வரும் 30-ந்தேதிக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்களும், வணிகர்களும், சொத்துவரி மற்றும் தொழில்வரியை செலுத்திட வேண்டுமென சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி 28-ந்தேதி (மிலாடி நபி) மற்றும் 30-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் ரிப்பன் கட்டிடத்திலுள்ள வருவாய்த்துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த்துறையில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

சொத்துவரி மற்றும் தொழில்வரியினை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அக்டோபர் 1-ந்தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும். எனவே, சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை இணையதளத்திலும், தலைமையகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!

Posted by - March 7, 2025 0
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலையில் குல்லாவுடன் லுங்கி அணிந்து வந்துள்ளார் விஜய். தவெக சார்பில்…

Mohan G Arrest: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைப் பேச்சு.. இயக்குநர் மோகன் ஜி கைது!

Posted by - September 24, 2024 0
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - December 4, 2023 0
வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில்…

திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் – அன்புமணி தேர்தல் பரப்புரை..!!!

Posted by - April 12, 2024 0
திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்…

இந்து மக்கள் – திருமாவளவன் ஆவேசம்

Posted by - January 24, 2024 0
இந்திய நாடெங்கும் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை கொடுமைகள் தலை விரித்தாடி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் அப்பாவி இந்து மக்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *