மணிப்பூரில் மீண்டும் இணைய சேவைகளுக்கு தடை

234 0

இம்பால்:

மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அதிகரித்து வந்த கலவரத்தை கட்டுப்படுத்த மே மாதம் 3-ம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் கலவரக்காரர்களுக்கு இடையே தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் கலவரம் படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில் கலவரத்தால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இணைய சேவை கடந்த 23-ஆம் தேதி மீண்டும் வழங்கப்பட்டது.again internet shutdown in manipur
இந்நிலையில் வன்முறை செயல்கள் தொடர்பான குறுஞ்செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த புதிய போராட்டங்களைத் தொடர்ந்து மீண்டும் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு மணிப்பூர் அரசாங்கம் நிறுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஏராளமான மாணவர்கள் தெருக்களில் இறங்கி முதல்-மந்திரி பிரேன் சிங்கின் இல்லத்தை நோக்கி பேரணி நடத்தினர். இரண்டு மாணவர்களின் சடலங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இணைய சேவைகளுக்கு தடை தொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ” வாட்ஸ் ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் வாயிலாக தவறான செய்திகள், வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும், வன்முறைக்கு காரணமாக பிற செய்திகள் பரவுவதைத் தடுத்து சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தற்காத்து கொள்வதற்கும் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. குழுக்களைச் சேர்க்கவும், வன்முறை செயல்களில் ஈடுபடவும் அதிக அளவில் குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இது மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும். இதனால், மாலை 7.45 மணிமுதல் அக்டோபர் 1ஆம் தேதி மாலை 7.45 மணிவரை செல்போன் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பூரண மதுவிலக்கு – முதலமைச்சர் அதிரடி…

Posted by - March 13, 2025 0
சட்டசபையில் 2025-26-ம் நிதியாண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்களுக்காக பல்வேறு…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. – காப்பாற்றுவது யார்?

Posted by - August 8, 2025 0
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் 1.75 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கும் அபாயம் உண்டாகியுள்ளது.…

இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இ.ண்.டி.யா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற CM ஸ்டாலின்…

Posted by - December 19, 2023 0
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இண்டியா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்.. பிரதமருடனான சந்திப்பில் நேரம் மாற்றம்! வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

Posted by - December 11, 2024 0
#kadavulae #Ajithae : என்னை ”கடவுளே அஜித்தே” என கூப்பிடுவது ,என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார் கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க என்றும் யாரையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *