குடந்தை:அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கு..அவதிபடும் பொது மக்கள்…

751 0

கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கபடும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடபடுகிறது.அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்காமலும் மக்களை அலையவிட்டுவருவதாக அப்பகுதி மக்கள் புலம்பி தீர்த்து வருகின்றார்கள்.

இது சம்பந்தமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கையில் மனுவுடன் இருந்த பொதுமக்களில் சிலரை விசாரித்தபோது.

வட்டாட்சியர் துறை என்பது  மக்கள்‌ தங்கள்‌ அடிப்படை தேவைக்காக அதிகமாக புழங்கும்‌ ஒரு அலுவலகம்‌ ஆகும்‌.

Kumbakonam, Thanjavur : கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகம் முன் அதிமுக சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க ...

அங்கு மக்கள்‌ கண்ணியமுடன்‌ நடத்தப்பட வேண்டும்‌ என்பது அடிப்படை மனித உரிமைஆகும்‌. ஆனால்‌ அரசு அலுவலகங்களில்‌ இந்த அடிப்படை மனித உரிமை தொடர்ந்து மீறப்படுவது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது என்று கூறினர்.

நில அளவை செய்ய தாமதம் ; நில அளவையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

நில அளவை செய்ய தாமதம் செய்யும் நில அளவையர்கள் மீது ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அளிக்கும்  விண்ணப்பங்கள் மீது உரிய காலகெடுவிற்குள்  நில அளவை செய்யாமல் கால தாமதம் செய்து அலைகழிக்கப்படுவதாகவும், நில அளவை விண்ணப்பத்தின் வரிசை பட்டியல்படி அளவீடு பணி மேற்கொள்வதில்லை நில அளவை செய்த பின்னர் நில அளவை சான்று வழங்காமல் அலைக்கழிக்கபடுகின்றனர் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தினந்தோறும் பல பேர் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு தங்கள் இடத்தை அளக்க கட்டணம் செலுத்தி பல வருடங்களாக காத்திருப்பதாகவும் தினந்தோறும் அலைக்கழிக்கபடுவதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.தனி மனித உரிமையை மதிக்காமல் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தாலும் எவ்வித முன்னேற்றமும் நடவடிக்கையும் தங்கள் மனு மீது எடுக்கபடாமல் கிடப்பில் போடபடுவதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட அளவில் நில அளவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகிறதா ? மேலும் அந்தந்த வட்டாட்சியர்கள் நில அளவை விண்ணப்பங்கள்  நிலை குறித்து ஆய்வு மேற்ககொள்ளப்படுகிறதா ? என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் இது போன்ற நில அளவையர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

இது சம்பந்தமாக மக்கள் எவ்வித நடவடிக்கை எடுத்து தங்கள் உரிமையை நிலைநாட்டலாம் என்று பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர்                                        திரு R.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கேட்ட போது அவர் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய தவறுவது பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடி சட்டபடி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து  மக்கள் தங்கள் உரிமையை பெற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுத்து மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடும் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Related Post

சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்பு

Posted by - August 21, 2023 0
சென்னை: பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.…

பான் கார்டு ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு.. வெளியான முக்கியத் தகவல்!

Posted by - March 28, 2023 0
PAN-Aadhaar linking : வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை…

மிரளப் போகும் கோவை! களத்தில் இறங்கும் விஜய்! என்ன ப்ளான்? சம்பவம் லோடிங்!

Posted by - April 26, 2025 0
கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது. கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள்…

“அரசியலில் குதிக்கும் முன்பே குளறுபடி…டென்ஷனில் தளபதி விஜய்..”

Posted by - October 28, 2023 0
தளபதி விஜய் சமீபமாகவே அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்…விரைவில் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது…அவரே ஹிண்ட்ஸ் கொடுத்ததும் இருந்தார்…

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட்

Posted by - August 20, 2025 0
முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ.30 லட்சம் பெறுவது எப்படி? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட் Tamil Nadu CM Health Insurance : தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *