சிறுதானியங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுவதால், சிலருக்கு தூக்கமின்மை அல்லது உடல் அசௌகரியம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதில் முக்கிய இடம் பிடிப்பவை சிறுதானிய உணவுகள். கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்குகின்றன. குறிப்பாக உடல் எடையை கட்டுப்படுத்தவும், சர்க்கரை நோயை சமநிலைப்படுத்தவும் சிறுதானிய உணவுகள் உதவுகின்றன என்பதால் பலரும் அவற்றை தினசரி உணவில் சேர்த்து வருகின்றனர்.ஆனால் சிறுதானிய உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்வது சிலருக்கு செரிமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அவை மெதுவாக செரிமானமாகும் தன்மை கொண்டவை. இதனால் இரவில் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று உப்புசம், அஜீரணம், வயிற்றில் கனத்த உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும், சில சிறுதானியங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டதாக கருதப்படுவதால், சிலருக்கு தூக்கமின்மை அல்லது உடல் அசௌகரியம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.அதே நேரத்தில், இந்த பாதிப்பு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. உடல்நிலை, வயது, உடற்பயிற்சி பழக்கம் மற்றும் உணவு முறைக்கு ஏற்ப இதன் தாக்கம் மாறுபடும். இரவு நேரத்தில் சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டுமெனில் அளவாக எடுத்துக் கொள்வதும், அதனுடன் எளிதில் செரிமானமாகும் காய்கறிகள், சூப் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்வதும் நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.காலை மற்றும் மதிய உணவாக சிறுதானியங்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு அதிக சக்தியையும், நீண்ட நேரம் பசியடக்கத்தையும் வழங்கும் என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சிறுதானிய உணவுகளை சரியான அளவிலும், சரியான நேரத்திலும் எடுத்துக் கொண்டால் உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- Home
- Trending Tamil
- கம்பு, கேழ்வரகு உடம்புக்கு நல்லதுதான்… இந்த நேரத்துல சாப்பிட்டா சிக்கல்தான்…
Related Post
யூடியூபர் இர்ஃபானின் திருமண போட்டோஸ் வைரல் ….
யூடியூபர் இர்ஃபானின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பிரபல ரெஸ்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டு ரிவியூ செய்து பிரபலமானவர் இர்ஃபான். உணவுகளை இவர் ரிவியூ செய்யும் விதம்…
யாரெல்லாம் கொய்யா பழம் சாப்பிடக்கூடாது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!
கொய்யாவிற்கு அலர்ஜி இருக்கும் நபர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் அல்லது கீழ்காணும் உடல்நல குறைபாடுகள் இருப்பவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். அருமையான சுவை…
பாக்யாவுக்கு ‘ஐ லவ் யூ’ சொன்ன பழனிசாமி.. அதிர்ச்சியில் கோபிக்கு நெஞ்சுவலி!
பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் ஸ்பார்க்கன் இங்கிலிஷ் கிளாசில் நெருங்கி பழகி வருகின்றனர்.…
உதவி கேட்டு நிற்காதீர்கள், வாழ்நாள் முழுவதும் பிரச்சனை.. செல்வராகவன் வருத்தம்
செல்வராகவன் காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பின், இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன,…
ரஜினியின் ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா – காரணம் என்ன?!
அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில்…
Categories
- Sports (85)
- TN Political Zone (343)
- Trending Tamil (708)
- Viral Social (12)
- அரசியல் (221)
- இந்தியா (477)
- உலகம் (174)
- சினிமா (826)
- தமிழ்நாடு (1,131)