Money Case : பணப்பெட்டியுடன் பூர்ணிமா

258 0

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியுடன் (Money Case) பூர்ணிமா ரவி வெளியேறி இருப்பது இன்றைய ப்ரோமோவில் தெளிவாக தெரிகிறது .

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்படுவது வழக்கம் .

அந்த பெட்டியில் வைக்கப்படும் குறிப்பிட்ட பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் தாங்களாகவே இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் இவர்ந்து மன நிறைவுடன் வெளியேறுவார் .

அந்த வகையில் இந்த சீசனிலும் இந்த வாரத்தில் பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டுக்குள் வைக்கப்பட்டது நாளுக்கு நாள் பண பெட்டியில் உள்ள பணம் அதிகரிக்க வந்தது .

பதற்றமான இந்த சூழலில் இந்த சீசனில் பணப்பெட்டியை எடுக்கும் போட்டியாளர் யார் என்பதை அறிய பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் இருந்த நேரத்தில் பூர்ணிமா அந்த பணப்பெட்டியை எடுத்துள்ளார் .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பணப்பெட்டியில் உள்ள பணம் 16 லட்சமாக மாறியுள்ளது .

இதனை கண்ட பூர்ணிமா வேகமாக முடிவெடுத்து நான் அந்த பணப்பெட்டியை எடுக்க போகிறேன் என தெரிவித்து அந்த பெட்டியையும் எடுத்துள்ளார் .

இதையடுத்து அனைவரும் வாழ்த்து சொல்லிய பூர்ணிமா அந்த பணப் பெட்டியை (Money Case) எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன் மாயா கண்ணீருடன் பூர்ணிமாவை கட்டியணைக்கிறார்.

இந்த பணப்பெட்டி டாஸ்க் வந்த நாள் முதல் போட்டியாளர்கள் மத்தியில் சில மாற்றங்கள் ஏற்பட மாயா பூர்ணிமா ஸ்கெட்ச் போட்டு இதனை செய்துள்ளது தெளிவாக தெரிகிறது.

90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் பூர்ணிமாவின் இந்த முடிவு பாராட்ட தக்கது என பலரும் கருத்து கூறி வருகின்றார் .

சிலர் பூர்ணிமா இந்த பணப்பெட்டியை எடுக்காவிட்டால் இந்த வார எவிக்சனில் நிச்சயம் வெளியேறிருப்பார் என்றும் கருத்து கூறுகின்றனர்.

இதையடுத்து இனி வரும் நாட்கள் போட்டியாளர்களுக்கு சவால் நிறைந்த நாளாக தான் கடக்கபோகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது .

Related Post

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. உறுதியாக கூறிய போட்டியாளர்கள்

Posted by - January 9, 2025 0
#biggbossseason8 #Muthukumaran #Soundarya #Jacqueline #biggbossjiocinema #vijaythalapathy #BiggBoss8Tamil #biggbosstamil #BiggBossTamil8 #bigboss8 #vote #vijaysethupathi #BIGBOSS2024 #bigboss #jacquelinefernandez #jacquelinefernandezhot #jacquelinefan #bb8 #vjvishal #rayan…

ஏஜென்ட் டீமுக்கு அன்பு கட்டளை இட்ட மாயா.. நீங்க அவ்ளோ நல்லவங்களா இல்லையே!

Posted by - January 17, 2024 0
BB7 Tamil: இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும், மாயா பாஸ் என அது சரியாக இருக்கும். இந்த சீசன் முழுக்க என்ன நடக்க…

இவர்கள் தான் பிக்பாஸ் 9 போட்டியாளர்களா?… உறுதி என கூறப்படும் லிஸ்ட் இதோ

Posted by - September 17, 2025 0
பிக்பாஸ் 9 பிக்பாஸ், இனி 100 நாட்கள் கவலையே இல்லை. செம சூப்பர் என்டர்டெயின்மென்ட்டாக இருக்கப்போகிறது. கலாட்டா, சண்டை, வாக்குவாதம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விளையாட்டு என…

ஒரே பதிவில் மெய்யழகனை குத்தி கிழிச்ச ப்ளூ சட்டை மாறன்.. மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை!

Posted by - September 30, 2024 0
‘திருப்பதி லட்டு’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதால்தான் மெய்யழகன் படம் இரு மாநிலங்களிலும் ஓடவில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் கிண்டலடித்துள்ளார். 96 என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப்…

10 நிமிடத்தில் செய்யலாம் மட்டன் மூளை மிளகு மசாலா

Posted by - March 17, 2023 0
தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள் மட்டன் மூளை – 200 கிராம் சின்ன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *