vairamuthu

Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!

80 0

திமுக தோல்விக்கு காரணமானவர்கள் என நீங்கள் சுட்டிக்காட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம் கிடையாது. ஏனென்றால் எல்லோர் மீது தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என வைரமுத்து பேசியுள்ளார்.

திமுக தோல்விக்கு காரணமானவர்கள் என நீங்கள் சுட்டிக்காட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம் கிடையாது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி குறித்து வருத்தமாக பேசினார். அவர் பேசுகையில், “இந்த நேரத்தில் என்னுடைய ஆதங்கம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திமுக தேர்தலில் தோற்கலாம். ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தோற்றிருக்கக்கூடாது. நிலா தேயலாம், வானம் தேய்ந்து விடக்கூடாது. இதுதான் என்னுடைய ஆதங்கம்” என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு நன்மை செய்தால், இரவு பகலாக உழைத்தால், தொண்டு செய்தால், கொளத்தூர் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியா அல்லது சிங்கப்பூரின் ஒரு பகுதியாக என கேட்கும் அளவுக்கு உயர்த்தியவர் மு.க.ஸ்டாலின்.

அவர் பேசிய பேச்சு என் இதயத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. தோல்விக்கு யாரையும் குறை சொல்லாதீர்கள். தோல்வியின் முழு பொறுப்பையும் நான் ஒருவன் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன் என சொன்னார். இந்த தோல்விக்குப் பின் நாம் இயக்கத்தை செம்மைப்படுத்த வேண்டும். என்ன நிகழ்ந்தது என்பதை நமக்கு நாமே சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். நான் எளியவன், அரசியல் அறிவு இல்லாதவன், உங்களோடு பயணிக்க வாய்ப்பு அற்றவன், தகுதி கூட இல்லாதவன் என சொல்லலாம்.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். திமுக தோல்விக்கு காரணமானவர்கள் என நீங்கள் சுட்டிக்காட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க இது சரியான நேரம் கிடையாது. ஏனென்றால் எல்லோர் மீது தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் சொல்லுங்கள். இது நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டிய காலமாகும்.

மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார் என்றால் தமிழர்களின் நன்றி உணர்வின் மீது நமக்கெல்லாம் சந்தேகம் வருகிறது. அந்த தோல்வியெல்லாம் ஒரு தோல்வியல்ல. மே 4ம் தேதி மட்டும் தான் மு.க.ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் கொளத்தூர் தொகுதி மக்கள் 365 நாட்களும் தோற்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நான் ஸ்டாலினுக்கு வருந்துவதை விட அந்த தொகுதி மக்களுக்காக அதிகம் வருந்துகிறேன்” என வைரமுத்து தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியை தழுவியது மிகப்பெரிய அளவில் தேர்தல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோல்வியில் இருந்து ஒரு மாத காலமாகியும் இன்னும் திமுகவினரால் மீள முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

asdfghnm e1777009634491

85%-ஐ கடந்த வாக்குப்பதிவு – ஸ்டாலின் Vs எடப்பாடி Vs விஜய் Vs சீமான் – CM வேட்பாளர்களின் நிலை என்ன?

Posted by - April 24, 2026 0
Tamilnadu Assembly Election 2026 Vote Percentage: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களின், தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விவரங்களை இங்கே அறியலாம். Tamilnadu Assembly…

”யாரு அந்த விஜய்?” துரைமுருகன் பாணியில் ஹேண்டில் பண்ணுங்க” திமுக அறிவுறுத்தல்..?

Posted by - March 4, 2025 0
”இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத, திமுகவின் கட்டமைப்புக்கு அருகே கூட வர முடியாத விஜய்க்கு பதில் சொல்லி பெரிய ஆளாக ஆக்க வேண்டாம் என அறிவுறுத்தல்”…

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted by - March 22, 2024 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய…
Generated Image November 17 2025 11 32AM

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025 0
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்…
dfhgnhfzgdfsdas e1778561566460

இபிஎஸ் கூட்டணிக்கு டீல் பேசியது உண்மை.. வதந்தி என சொன்ன திமுக.. போட்டுக்கொடுத்த சி.வி.சண்முகம்!

Posted by - May 12, 2026 0
1977ம் ஆண்டிற்கு பிறகு திமுக அல்லது அதிமுக தான் ஆட்சியில் அமர்ந்து வந்தது. ஆனால் முதல்முறையாக இருகட்சிகளும் இல்லாத ஒரு கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *