tvk vijay 2

Vijay Govt Formation: தவெகவுக்கு ஓகே சொன்ன இடதுசாரிகள்.. முடிவுக்கு வரும் இழுபறி.. ஆட்சியமைக்கும் விஜய்?

87 0

Tamil Nadu Government Formation: விஜய்க்கு ஆதரவு தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-ம் விசிகவும் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்கு, இடதுசாரிகளும் ஆதரவு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெகவுக்கு ஆட்சி?

சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்து நிலையில்  மூலம் தவெகவின் பலம் 112 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் 108 இடங்களை கைப்பற்றியதன் அடிப்படையில் ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய். 118 MLA-க்களின் ஆதரவை காட்டிவிட்டு ஆட்சியமைக்குமாறு ஆளுநர் மாளிகை முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஆனால் ஆட்சியமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதால் விஜயை பதவியேற்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது.

கடிதத்தில் சொதப்பியதவெக

ஆனால் விஜய் தரப்பில் இருந்து ஒரு தவறு செய்துவிட்டதாக தகவல் வெளியானது. விஜய் ஆளுநரிடம் எழுதிய கடிதத்தில் 108 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் என சொல்லி விஜய் ஆட்சியமைக்க கேட்டிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் MLA-க்களின் ஆதரவையும் சேர்த்து கடிதம் கொடுத்ததால் கூட்டணி ஆட்சி என்று வரும் போது 118 எம்.எல்.ஏக்களை ஆளுநர் தரப்பு கேட்டதாக பேசப்பட்டது.

 

ஆட்சியமைக்க ஆதரவு

இந்த நிலையில் தான் விஜய்க்கு ஆதரவு தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-ம் விசிகவும் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் விஜய்க்கு ஆட்சியமைப்பதற்கு தேவைப்பட்ட 6 MLA-க்கள் கிடைத்துவிட்டனர். இதனைதொடர்ந்து இன்று மாலை 4:30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் விஜய். ஆளுநர் அழைப்பு விடுத்தால் விஜய் நாளை அல்லது நாளை மறுநாள் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

Generated Image January 07 2026 5 00PM

’DMK FILES’

Posted by - January 7, 2026 0
தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி…
fasdfr vv

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

Posted by - April 22, 2026 0
சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில்…
vijay 2

ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?

Posted by - March 16, 2026 0
தவெகவினர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும், வீதி வீதியாகவும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அக்கட்சி தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.…

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted by - March 22, 2024 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *