dmk

நாடாளுமன்றத்தில் திமுக இருக்கைகளை மாற்றி தரக் கோரி சபாநாயகருக்கு கனிமொழி கடிதம்

88 0

 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி முறிந்த நிலையில், மக்களவையில் திமுகவுக்கான இருக்கைகளை மாற்றி வழங்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்​தின் பிர​தான கட்​சிகளான திமுக, அதி​முகவை பின்​னுக்​குத் தள்ளி தமிழக வெற்​றிக் கழகம் தனித்து நின்று 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆனால் தனி மெஜாரிட்டி கிடைக்​க​வில்​லை. காங்​கிரஸ் தனது 5 எம்எல்ஏக்​களின் ஆதரவை அளித்​திருக்​கிறது. நீண்ட காலம் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் இப்போது தவெகவுடன் கைகோத்துள்ளது.

இந்நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய நிலையில், மக்களவையில் திமுக எம்.பி.க்களுக்கு அருகே காங்கிரஸ் அமரும் இருக்கையை மாற்றம் செய்ய வேண்டும். தற்போதைய இருக்கை அமைப்பில் காங்கிரஸுடன் இணைந்து அமருவது பொருத்தமாக இருக்காது.

மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் தங்களது பொறுப்புகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில், தனியான இருக்கை வசதியை ஒதுக்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்! “கொரோனா” முக்கிய காரணம்! மருத்துவர்கள் பகீர்! தடுக்க என்ன செய்யணும்

Posted by - September 30, 2023 0
டெல்லி: இன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய்களும் இதய பாதிப்புகளும் திடீர் திடீரென அதிகரிக்கும் நிலையில், அதைத் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகளைத்…

எம்.எல்.ஏ. பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி- கடிதத்தில் பரபரப்பு புகார்

Posted by - June 30, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை…

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த இளம்பெண் கொலை- காதலன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

Posted by - June 30, 2023 0
திருப்பதி: சித்தூர் மாவட்டம், பங்காருபேட்டை, போட குர்கியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரை கடந்த சில மாதங்களாக…

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

முதலிரவில் குழந்தை பெற்ற மணப்பெண்- கனவுகளோடு காத்திருந்த கணவன் அதிர்ச்சி

Posted by - June 30, 2023 0
ஆயிரம் பொய் சொல்லி யாவது திருமணத்தை நடத்த வேண்டும். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ற பழமொழி உள்ளது. இந்த பழமொழிகளை நிரூபிக்கும் வகையில் இளம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *