அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’ – ​முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்

94 0

சென்னை: வானியல் அபூர்​வ​மான முழு சந்​திர கிரகணம் நேற்று நிகழ்ந்​தது. கிரகணத்​தின்​போது, அழகிய சிவப்பு நிறத்​தில் காணப்​பட்ட சந்​திரனை ஏராள​மானோர் உற்​சாகத்​துடன் பார்த்து மகிழ்ந்​தனர்.

சூரியன், சந்​திரன், பூமி மூன்​றும் ஒரே நேர்க்​கோட்​டில் வரும்​போது கிரகணங்​கள் நிகழ்​கின்​றன. அப்​போது நில​வின் நிழல் சூரியனை மறைத்​தால் அது சூரிய கிரகணம் என்​றும், பூமி​யின் நிழல் சந்​திரனை மறைத்​தால் அது சந்​திர கிரகணம் என்​றும் அழைக்​கப்​படு​கிறது.ஆண்​டு​தோறும் சராசரி​யாக 4 கிரகணங்​கள் வரை நிகழும். சந்​திரனை பூமி முழு​மை​யாக மறைத்​தால் முழு சந்​திர கிரகணம் எனவும், ஒரு குறிப்​பிட்ட பகு​தியை மட்​டும் மறைத்​தால் பகுதி கிரகணம் எனவும் கூறப்​படு​கிறது. பவுர்​ணமி நாளில் மட்​டுமே சந்​திர கிரகணம் நிகழும்.அந்த வகை​யில், இந்த ஆண்​டின் முதல் சந்​திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்​தது. அதை தொடர்ந்​து, 2-வது சந்​திர கிரகணம் நேற்று நிகந்​தது. இந்​திய நேரப்​படி இரவு 9.57 முதல் 1.27 மணி வரை கிரகணம் தெரிந்​தது. அதில் முழு சந்​திர கிரகணத்தை நள்​ளிரவு 11.42 முதல் 12.33 மணி வரை காண முடிந்​தது. அப்​போது ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) எனப்​படும் முழு​மை​யான அடர் சிவப்பு நிறத்​தில் சந்​திரன் காட்​சி​யளித்​தது.

ஐரோப்​பா, ஆசி​யா, ஆஸ்​திரேலி​யா, ஆப்​பிரிக்​கா, தென் அமெரிக்​கா, பசிபிக், அட்​லான்​டிக், ஆர்​டிக் உட்பட உலகின் பல்​வேறு பகு​தி​களில் இதை பார்க்க முடிந்​தது. குறிப்​பாக, இந்​தி​யா​வில் இரவு நேரம் என்​ப​தால் பல்​வேறு இடங்​களில் சந்​திர கிரகணத்தை மக்​கள் தெளி​வாக கண்டு ரசித்​தனர். தமிழகத்​தில் சில இடங்​களில் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​ட​தால் பார்​வை​யாளர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர்.

அடுத்த முழு சந்​திர கிரகணம் 2028 டிசம்​பர் 31-ம் தேதி​தான் நடை​பெறும். அதே​போல, செப்​டம்​பர் 21, 22-ம் தேதி​களில் நிகழ உள்ள பகுதி சூரிய கிரகணம் இந்​தி​யா​வில் தெரி​யாது. தெற்கு ஆஸ்​திரேலி​யா, தெற்கு பசிபிக், அட்​லான்​டிக் மற்​றும் அன்​டார்​டி​கா​வின் சில பகு​தி​களில் மட்​டுமே தெரி​யும்​ என்​பது குறிப்பிடத்தக்கது.

Related Post

சிம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. வருகிறது E-Sim.. ஆண்ட்ராய்டு போன் வைத்து உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Posted by - January 19, 2023 0
Android 13 | இவை சாத்தியமானால், நிறுவனம் தனது செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய உதாரணம்!…

இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிக நிலநடுக்கங்கள் – சிக்கித் திணறிய துருக்கி

Posted by - February 20, 2023 0
துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக…

“இருமுனைப் போருக்கு தயார்“; மீண்டும் இந்தியாவை வம்புக்கிழுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

Posted by - November 14, 2025 0
இந்தியாவுடன் மறைமுகப் போரை நடத்தி வருவதாக ஏற்கனவே கூறிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தற்போது போருக்கு தயாராக இருப்பதாகக் கூறி மீண்டும் இந்தியாவை வம்பிழுத்துள்ளார்.…

“இந்தியா செய்யுறத பார்த்தாலே எரிச்சலாகுது” – ஒட்டுமொத்தமாக கடுப்பில் குதித்த அமெரிக்கா

Posted by - August 1, 2025 0
இந்தியாவின் செயல்பாட்டால் அவர்களுடனான உறவில் எரிச்சல் ஏற்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். USA On INDIA: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல்…

Whatsapp | இனி வாட்ஸ் அப்பில் இந்த சேவைகளை பயன்படுத்த கட்டணம்..! வெளியான அதிர்ச்சி தகவல்

Posted by - June 19, 2025 0
சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை ஒளிபரப்ப மெட்டா திட்டமிட்டுள்ளதாகவும் அதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வணிக வாய்ப்புகளை பெருக்க முடியும் என்றும் மெட்டா கருதுவதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *