அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

132 0

சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது, 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்குவது, ஊதிய முரண்பாட்டை களைவது என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடி வருகின்றனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டம், அடையாள உண்ணாவிரதம், கோரிக்கை முழக்கம் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது.

இந்நிலையில், தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தபடி, தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அரசு சார்பில் பங்கேற்ற அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் ஒவ்வொரு சங்கத்தின் நிர்வாகிகளின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டனர். காலை 11.15 மணி அளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை மதியம் 2 மணிக்கு மேல் நீடித்தது. ஆனால், இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘போட்டோ ஜியோ’ மாநில ஒருங்கிணைப்பாளர் த.அமிர்தகுமார் கூறியதாவது:

கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால், நிதி பிரச்சினை என ஏற்கெனவே சொல்லி வந்ததையே மீண்டும் சொல்கின்றனர். எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. வரும் 29-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது. இதன்பிறகு, ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாஸ்கரன் கூறும்போது, ‘‘அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே, நாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். டிசம்பர் 27-ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆயத்த மாநாடு நடத்தப்படும்’’ என்றார்.

Related Post

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…

ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - January 9, 2026 0
ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார்…

திருச்சியில் விஜயின் எண்ட்ரி – தமிழக அரசியல் ஆட்டம் காணுமா? திராவிட கட்சிகளின் செண்டிமெண்ட்…

Posted by - September 13, 2025 0
 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம், திருச்சியில் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம்…

”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

Posted by - October 31, 2025 0
நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, பிரதமர் மோடி மறந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். MK Stalin ON PM Modi: பிரதமர் மோடி…

திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்

Posted by - January 7, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியை உறுதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *