அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி

52 0

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 426 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப் பிரிவுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிப்ரவரி 9ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பிப்பது எப்படி? என்ன தகுதி? வயது வரம்பு ஆகியவை குறித்து விரிவாக அறியலாம்.

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கு பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன. மேலும், 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.

1,277 பேர் பணியமர்த்தல்

ஆரம்பத்தில் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் முதற்கட்டமாக 574 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்படவும், பின்னர் 823 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தற்காலிகமாக 1,277 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆக மொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது. இதற்குத் தேர்வர்கள் 09.02.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை, கோவை, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய எட்டு மண்டலங்களில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

எஸ்சி, எஸ்டி – ரூ.100

பிற பிரிவினர் – ரூ.250

வயது வரம்பு

அதிகபட்ச வயது 57

கல்வித் தகுதி

முதுநிலை பட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் 55% பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட பழங்குடியினர் /பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / மாற்றத்திறனாளி பிரிவினர் ஆகியோர் 50% மதிப்பெண் பெற்றிருத்தல் போதுமானது. உடன், பி.எச்டி அல்லது NET / SLET / SET ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருத்தல் அவசியம்.

கௌரவ விரிவுரையாளர்கள் தங்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் கல்வியில் மதிப்பீடு 85 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் 15 மதிப்பெண்கள் ஆகியவற்றில் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் 100-ன் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். அரசின் வழக்கமான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்.

விண்ணப்ப நடைமுறைகள்

விண்ணப்பப் பதிவு செய்தல்

விண்ணப்ப விவரங்களை உள்ளிடுதல்

சான்றிதழ்கள் பதிவேற்றுதல்

புதிய விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல்

https://www.tngasa.org/pdf/TNGAS-GL-Instruction-Tamil.pdf என்ற இணைப்பில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட வாரியான காலி பணியிடங்களின் விவரம் https://www.tngasa.org/pdf/district-wise-GL-New.pdf என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Post

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - January 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Posted by - November 5, 2025 0
“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்” “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று…

டாக்டர்.ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் இடியும் நிலையில் கட்டிடங்கள்- ஆசிரியர் தினம் கொண்டாடும் நிலையில் அவலம்

Posted by - September 4, 2023 0
ராணிப்பேட்டை: முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற…

ஆட்டம் காணும் திமுக? அமைச்சர் கே.என். நேரு, மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – நெருங்கும் தேர்தல்

Posted by - April 7, 2025 0
தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கே.என். நேரு…

விசிக எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றம் @ கும்பகோணம் மகாமக குளக்கரை – நடந்தது என்ன?

Posted by - December 26, 2023 0
#kumbakonam #tnbjp #vck #annamalai #enmanenmakkal #dmk #pixeltv#pixelmedia கட்சி கொடிகள் அகற்றப்பட்ட மகாமக குளக்கரைப் பகுதி கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பால் பாஜக கொடிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *