Generated Image November 05 2025 10 13AM

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

193 0

“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்”

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று 7 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது”

தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் வாரம் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்திருந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக, மழை சற்று குறைந்து இருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை அதன் புறநகர் பகுதியில் திடீரென மழை பெய்தது. இந்தநிலையில் இன்று தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழை முன்னறிவிப்பு என்ன ?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட மாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட நிலவரம் என்ன ? Kanchipuram Weather Forecast Today

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற இடங்களில், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த நிலை இந்த மாதம் 11ஆம் தேதி வரை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நிலவரம் என்ன ? Thiruvallur Weather Forecast Today

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை நேரங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் நிலவரம் என்ன ? Chengalpattu Weather Forecast Today

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பிற பகுதிகளில் வானம் மேகத் மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Related Post

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - April 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

புதிய தலைமுறை முடக்கம் | ”ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” – தலைவர்கள் கண்டனம்! #StandWithPT

Posted by - October 7, 2025 0
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய…

இன்று 11 மாவட்டங்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Posted by - December 11, 2022 0
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு…

“திராவிட மாடல் ஆட்சி… மக்கள் விரோத ஆட்சி” – திமுகவை நேரடியாக சாடிய தவெக தலைவர் விஜய்!

Posted by - October 28, 2024 0
தவெக முதல் மாநில மாநாட்டில் தங்களின் அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் பேசினார். தவெக மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலை…

மெட்ராஸ் ஐ: அறிகுறியும்.. தற்காப்பு முறைகளும்.. Madras eye

Posted by - December 2, 2022 0
சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, ‘மெட்ராஸ் ஐ’. கண் வெண்படல அழற்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *