இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

207 0

அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டம் என்ற பெயரில் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு முதல் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்திருந்தாலும், அந்த மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை  வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்  அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தில் இனி மாதம்தோறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்க இருப்பது மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை  மாநில,மத்திய அரசாங்கங்கள் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியாகும் நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அதற்கு முன்பாக அறிவிப்பை வெளியிடும் வகையில் ராமாமிர்தம் அம்மையார் உதவித் தொகை புதுமைப் பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பெண்களின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் இதுவரை 2லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வந்தனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பாணை அமலுக்கு வந்தால் மேலும் அதிக கல்லூரி மாணவிகள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

Posted by - January 10, 2025 0
பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை…

புழல் ஏரியின் கரையில் உடைப்பா… தமிழக அரசு விளக்கம்

Posted by - December 7, 2023 0
புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு…

உடனே விண்ணப்பிங்க!

Posted by - August 6, 2025 0
அரசு வெளியிட்ட தகவலின்படி, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 29, 2025-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். சென்னை: தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள…

கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ முன்பு விஜய் இன்று ஆஜராகிறார்

Posted by - January 12, 2026 0
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராகிறார். இந்த விசாரணை 3 நாட்கள்…

விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் – பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்ட பிரேமலதா

Posted by - May 10, 2024 0
விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார். மறைந்த தேமுதி நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *