இனி கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கூடாது.. அரசு போட்ட அதிரடி உத்தரவு!

211 0

பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

கோயில் பூஜைகளில் அரளி பூக்களை பயன்படுத்த கேரள அரசு தடை வித்தித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு தடை வித்தித்துள்ளது.

ஏன் அரளி தடை செய்யப்பட்டது ?

கேரளாவில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, சூரியா சுரேந்திரன் என்கிற 24 வயது செவிலியர் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்த போது அதற்கு காரணம் அரளி பூ என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

சூரியாவுக்கு லண்டனில் வேலை கிடைத்திருந்தது. அதன்படி அவர் ஏப்ரல் 28 ஆம் தேதி லண்டனுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது செல்போன் அழைப்பு வரவே, சூரியா போனில் பேசிக்கொடிருந்தார். அப்போது வீட்டின் முன்பு இருந்த அரளி செடியில் இருந்து ஒரு பூவை எடுத்து விளையாட்டு தனமாக வாயில் போட்டுள்ளார்.

அதன் பிறகு வாந்தி, மயக்கம் என சூரியாவின் உடல்நிலை மோசமடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அவர் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.சூரியா உயிரிழப்பதற்கு முன்பு மருத்துவர்களிடம், தான் அரளி பூ மற்றும் அதன் இலைகளை வாயில் போட்டு மென்றதாக கூறியுள்ளார். இந்நிலையில் அவர் உயிரிழந்த பிறகு அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அவர், அரளி பூ விஷத்தால் உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.ஆயுர்வேத மருத்துவத்தில் அரளி பூ பயன்படுத்தப்பட்டாலும் அது மிகவும் விஷ தன்மை வாய்ந்தது என உலக நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எரிந்த அரளி பூவின் புகையை சுவாசித்தால் கூட அது விஷமாக மாற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.எனவே கேரள அரசு கோயில்களில் அரளி பூக்களை பயன்படுத்த தடை வித்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஆந்திராவில் முதியவர் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள்- டாக்டர்கள் அதிர்ச்சி

Posted by - March 11, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை…

இமாச்சலில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழப்பு

Posted by - July 13, 2023 0
சிம்லா: தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில…

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது

Posted by - October 8, 2025 0
சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. சர்​வ​தேச பொருளா​தார…

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

Posted by - January 20, 2025 0
சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை…

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.218 கோடி!

Posted by - May 22, 2024 0
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு நிலவரப்படி, சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 218 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே அதற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *