இன்று மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் சிறை தண்டனை

201 0

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில் இன்றுடன் பரப்புரை நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

பரப்புரை நிறைவைத் தொடர்ந்து வாக்குப்பதிவு முடியும் வரை அமலில் வரும் கட்டுப்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு வரையிலான கட்டுப்பாடுகள்

அதில், இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பு இல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதோர், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்கள் என கண்டறியப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டதையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி வாயிலாகவும் பரப்புரை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

பொதுமக்களை ஈர்க்கும் வகையில் எந்தவொரு இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் கூடாது என்றும், தேர்தல் பரப்புரைக்கான நேரம் முடிந்த பின், பரப்புரை மேற்கொண்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபாரதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணிக்கு பின் செயல்திறனற்றதாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாகன அனுமதியும்… கட்டுப்பாடும்…

வாக்குப்பதிவு நாளில், சில கட்டுப்பாடுகளுடன் ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாகன அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி மக்களவைத் தொகுதி முழுவதும் சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கும் ஒரு வாகனத்திற்கு அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.2 நபர்களை மட்டுமே கொண்ட, தற்காலிக பிரசார அலுவலகத்தை வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுளளது. தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை: சென்னையிலும் விலை உயர வாய்ப்பு

Posted by - July 29, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி…

ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதுக்கடைக்கு விடுமுறை அறிவிப்பு – காரணம் என்ன?

Posted by - August 29, 2025 0
புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் மதுக்கடைகள், மதுபார்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மூட உத்தரவு புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில்…

Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி

Posted by - November 15, 2025 0
Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியுள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Bihar Election…

காதலை கைவிட மறுத்ததால் கொலை: தங்கை தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்து வந்த அண்ணன்

Posted by - July 22, 2023 0
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ரியாஸ் (24). இவரது தங்கை ஆசிபா (18). ஆசிபாவும் அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபுவும் காதலித்து வந்தனர்.…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *