இறுமாப்புடன் சொல்கிறேன்…. – தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி

153 0

தேர்தல் வெற்றி தொண்டர்களின் கரங்களில்தான் இருக்கிறது. கடமை உணர்வோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம்.

200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் என இறுமாப்புடன் சொல்கிறேன் என திமுக எம்.பி கனிமொழி தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “தேர்தல் வெற்றி தொண்டர்களின் கரங்களில்தான் இருக்கிறது. கடமை உணர்வோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். 200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் என இறுமாப்புடன் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தி.மு.க மாநிலஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டமானது, திருச்செந்தூரில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமானகீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்,  தூத்துக்குடி மாநகராட்சிமேயர் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் , திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியும் கலந்து கொண்டு,  தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குநலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இநிகழ்வில் கனிமொழி பேசியதாவது, “ இந்த தேர்தலில் வெற்றி என்பது உங்களின் கரங்களில் இருக்கிறது. அந்த கட்டுப்பாடோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். திமுக தலைவரும், தமிழ்நாடுமுதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சொல்வது போல் 200 தொகுதிகளிலும் நிச்சயமாக, நானும் இறுமாப்போடுசொல்கிறேன் வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.

நேற்றைய தினம் அம்பேத்கர் வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் பங்கேற்று, திமுகவை தாக்கி பேசியிருந்திருந்தார். விஜய் பேசியிருந்ததாவது , “மக்களின் அடிப்படைப் பாதுகாப்பான சமூக நீதியைக் கொடுக்காமல், கூட்டணிக் கணக்குகளை மட்டுமே மனதில்வைத்து, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாளத்தோடு முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்கள் சார்பாக நான் விடுக்கும் எச்சரிக்கை.

நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அத்தனையும் 2026இல் மக்களால் மைனஸ் செய்யப்படும்” என பேசியிருந்தார்.

இந்நிலையில், விஜய் பேச்சானது திமுகவினரை சற்று, உற்றுநோக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். இந்த தருணத்தில், விஜய் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேசியுள்ளார்.

Related Post

பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் – விகடன் இணையதளம் முடக்கம்!

Posted by - February 17, 2025 0
பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட விகடன் நிறுவனத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தனியார் ஊடக நிறுவனமான விகடன் தனது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை…

அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

Posted by - July 3, 2025 0
2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்…

520 கிமீ தூரம்.. 12கிமீ வேகம்.. நெருங்கி வரும் மாண்டஸ் புயல்.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அலெர்ட்!

Posted by - December 8, 2022 0
Cyclone Mandous | டெல்டா மற்றும் கடலூரில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த…

பழைய உணவு பொருட்களை பயன்படுத்துவதால் விஷமாக மாறும் “சவர்மா”

Posted by - September 20, 2023 0
அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் ‘சவர்மா’ என்ற பெயரில் தயாரித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *