ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

114 0

நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் ராஜேஷ் மீதே, திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்பவரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும், திமுகவினர் எல்லைமீறிப் போய்க் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால் ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தெருத்தெருவாக ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் தமிழக மக்கள் இனியும் திமுகவை மன்னிப்பதாக இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

Related Post

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Posted by - March 11, 2026 0
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

Posted by - January 23, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம…

மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?

Posted by - December 10, 2025 0
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 3 ஆயிம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்…

கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்

Posted by - February 4, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம், மானிய விலையில் சிலிண்டர் என பல…

விஜய் முதலமைச்சர் ஆவாரா?

Posted by - February 10, 2026 0
நடிகர் விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய பிறகு, அவரை பற்றிய பேச்சு தேசிய அளவிலும் வர தொடங்கி இருக்கிறது. அவரது கடைசி படமான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *