கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகார்.. சாட்டை துரைமுருகனை விடுதலை செய்த நீதிபதி

176 0

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனை, நீதிமன்ற காவலில் அனுப்ப நீதிபதி மறுத்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், சாட்டை துரைமுருகனை, திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மட்டுமன்றி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு செல்ல தேவையில்லை என கூறி, சாட்டை துரைமுருகனை விடுவித்தார். இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன் என சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Post

ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Posted by - March 27, 2023 0
தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உதவித்தொகை திட்டத்தை…

“என்னோட கள அரசியல் பயணம் பரந்தூரில் தொடங்குகிறது” – விஜய் பேச்சு.. முழு விவரம் இதோ!

Posted by - January 20, 2025 0
விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக…

சேற்றுப்புண் அல்ல.. கருப்பு பூஞ்சையை விட மோசமான பாக்டீரியா.. கொஞ்சம் ஏமாந்தால் கூட ஆளே காலிதான்!

Posted by - December 14, 2023 0
சென்னை: சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து மீலியாய்டோசிஸ் எனும் பாக்டீரியா அதிக அளவில் பரவி வருவதாக சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

குடந்தை:அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கு..அவதிபடும் பொது மக்கள்…

Posted by - December 8, 2023 0
கும்பகோணம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கபடும் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடபடுகிறது.அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல் அதன் மீது நடவடிக்கை எடுக்காமலும் மக்களை…

கொளுத்தும் கோடை! – ஏசி விற்பனை உயர்வு…!

Posted by - April 24, 2024 0
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மக்கள் தங்கள் இல்லங்களில் மின்விசிறி, ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மதிய நேரத்தில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் வீட்டின் உள்ளே அனல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *