கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

314 0

பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கள்ளகாதலனுடன் அடிக்கடி செல்போனில் பேச தொடங்கினார். பின்னர் இருவரும் தனிமையில் சந்திக்க விரும்பினர்.நள்ளிரவில் "கள்ள" உறவு.! வசமாக சிக்கிய காதலன்.. கையோடு மனைவிக்கு திருமணம்  செய்து வைத்த கணவர்.. ஷாக் | As Woman caught with lover, husband gets wife  married to her lover ...

கணவர் வேலைக்கு சென்றதும் இளம்பெண் போன் செய்து கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். இந்த நெருக்கமான சந்திப்பு அடிக்கடி தொடர்ந்தது. இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வழக்கம்போல வேலைக்குச் சென்றதும் இளம்பெண் தனது கள்ளக்காதலனை போன் செய்து வரவழைத்தார். அதன்படி தயாராக இருந்த கள்ளக்காதலன் இளம்பெண் வீட்டிற்கு வந்தார். இருவரும் கதவை பூட்டிக்கொண்டு தனி அறையில் உல்லாசமாக இருந்தனர். இதனை நோட்டமிட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். கதவை தட்டி இளம்பெண்ணின் பெயரைக் கூறி அழைத்தனர்.

அப்போது அவர்கள் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்து கொண்டு கதவை திறந்தனர். ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பொதுமக்கள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனை சரமாரியாக அடித்தனர். இதில் அவரது முகம் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இளம்பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது தனது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருந்ததை கையும் களவுமாக பிடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டதும் அவர் உறைந்து போய் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் மனைவி கள்ளக்காதலனை அங்குள்ள சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்தார். இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது இளம்பெண் தனது தவறை உணர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார். அந்த நேரத்தில் கள்ளக்காதலன் இளம்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்தார். நான் வேலைக்கு சென்ற நேரத்தில் என்னை ஏமாற்றி கள்ளகாதலனை சந்திக்க வேண்டாம். உன் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் எனக் கூறி கணவன் ஆசீர்வதித்தார். கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்த இளம்பெண் கள்ளக்காதலுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கள்ளக்காதனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Post

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை… இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 3, 2023 0
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…

640 கிலோ மீட்டர்ல இருக்கு..! எப்போ மழை? எவ்வளவு வேகத்தில் காற்று வீசப்போகிறது?

Posted by - December 8, 2022 0
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ்…

டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை

Posted by - June 27, 2023 0
டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை…

Voter ID இல்லையா? கவலை வேண்டாம்.. இந்த 12 ஆவண்ங்களில் ஒன்று இருந்தால் போதும்

Posted by - April 18, 2024 0
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *