கள்ளக்காதலுக்கு இடையூறு- 4 வயது மகளை கொன்று நாடகமாடிய கல்நெஞ்ச தாய்

202 0

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். கார் டிரைவர். இவரது மனைவி கல்யாணி (வயது 22). இவர்கள் 2018-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு தன்விதா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த சிறுமிக்கு 4 வயதாகிறது.Murder under Indian Penal Code: All you need to know about it

கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கல்யாணி செங்கன் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த நவீன் குமார் (19) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாய் வீட்டிற்கு சென்று நவீன் குமாருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இவர்களது கள்ளக்காதலுக்கு தன்விதா தடையாக இருப்பதாக இருவரும் எண்ணினர். இதனால் மகளை கொலை செய்ய கல்யாணி முடிவு செய்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுமி தன்விதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடல் நிலை சரியில்லாததால் மகள் இறந்து விட்டதாக அங்குள்ளவர்களிடம் கூறினார்.

மகளின் சாவில் சந்தேகம் அடைந்த ரமேஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் கல்யாணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகளை கொலை செய்ததாக கல்யாணி வாக்குமூலம் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாணியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Related Post

கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை!

Posted by - November 24, 2025 0
புதுடெல்லி: ஆ​தார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​​களை அமல்​படுத்த இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) திட்​ட​மிட்டுள்​ளது. இதன்​படி வருங்​காலத்​தில் ஆதார் அட்​டை​யில்…

”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

Posted by - December 11, 2024 0
#kadavulae #Ajithae : என்னை ”கடவுளே அஜித்தே” என கூப்பிடுவது ,என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார் கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க என்றும் யாரையும்…

காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்

Posted by - February 20, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில்…

வரலாறு படைக்க தயாராகிறது “சந்திரயான்-3”: நிலவில் இன்று தரையிறங்குகிறது

Posted by - August 23, 2023 0
ஸ்ரீஹரிகோட்டா: உலகில் வளர்ச்சி அடைந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம்காட்டி வருகின்றன. அந்த வகையில், பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *