காதலியின் கணவரை கொன்று 6 துண்டாக வெட்டி புதைத்த கள்ளக்காதலன் கைது

250 0

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஜோகேந்திரா இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.What you need to know about inter-state arrest - iPleaders

அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜோகேந்திரா வேலை பார்த்த நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் உள்ளூர் போலீசில் கடந்த 13-ந்தேதி புகார் அளித்தார். அப்போது மகன் மாயமானதற்கும், மதன்லால் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோகேந்திராவை தேடி வந்தனர். மேலும் மதன்லால் என்பவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் ஜோகேந்திரா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஜோகேந்திராவின் மனைவிக்கும், மதன்லால் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறி தொடர்ந்து வந்துள்ளது.

கணவர் வேலைக்கு சென்றபிறகு கள்ளக்காதலன் மதன்லாலுடன் ஜோகேந்திராவின் மனைவி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். நாளடைவில் இந்த விஷயம் தெரிந்த ஜோகேந்திரா மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவர் ஜோகேந்திராவை தீர்த்துக்கட்ட மதன்லாலிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்து வரும் ஜோகேந்திராவை கொலை செய்ய மதன்லால் திட்டம் போட்டார். அதன்படி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜோகேந்திராவை அழைத்து சென்று கொடூராமாக கொலை செய்துள்ளார். பின்னர் அந்த உடலை தலை, கை, கால்கள் என 6 துண்டுகளாக்கினார். அந்த உடல் பாகங்களை தனது வீட்டில் இருந்து இரவு நேரத்தில் எடுத்துச் சென்று சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டம் மற்றும் காட்டுப்பகுதிக்குள் புதைத்துள்ளார்.

அதனை மதன்லால் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் மீட்டனர். மேலும் கொலையை மறைக்கும் விதமாகவும், உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்காமல் இருக்கவும் உடல் பாகங்களை புதைத்த இடத்தில் மதன்லால் மா மரக்கன்றுகளை நட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கொலையுண்ட ஜோகேந்திராவின் தந்தை மிஸ்ரலால் மேக்வால் கூறுகையில், தனது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதன்லால் தவிர மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே இதில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த கொடூர கொலை சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு…

Posted by - April 29, 2025 0
ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்கும் மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை சரி செய்ய, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு…

தொடர் வீழ்ச்சிக்கு பிறகு மீளும் பங்குச்சந்தைகள்….. முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட எந்த பங்கை வாங்கலாம்…

Posted by - August 7, 2024 0
அமெரிக்காவில் சாத்தியமான பொருளாதார மந்தநிலை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களினால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3 நாட்களாக பெரும் வீழ்ச்சி அடைந்தன. இந்த…

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

Posted by - April 5, 2023 0
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. இந்தியாவில்…

“யாரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை, பாகிஸ்தானே கெஞ்சியது“ – ட்ரம்ப் பேச்சுக்கு மோடி பதிலடி

Posted by - July 30, 2025 0
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விளக்கமளித்த பிரதமர் மோடி, ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். அது குறித்து அவர் என்ன கூறினார் என்பதை…

மாட்டு சாணத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்…மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - June 19, 2025 0
மாட்டு சாணங்களில் இருந்து செய்யப்படும் எடுக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வைத்து ஒரு தொழில் அல்லது வர்த்தகம் துவங்குவதற்கு முன் அதற்கான சந்தை மற்றும் அதன் வர்த்தக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *