குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… இந்த வாரம் எலிமினேட் இவரா?

215 0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. கடந்த 3 சீசன்களும் மெகா ஹிட் கொடுத்த நிலையில் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் 4-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக ரக்‌ஷன் தொடர்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக் முதல் கோமாளிகள் வரை பெரும்பாலானோர் அடுத்தடுத்து வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றி வருவதாலும், பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி வேண்டாம் என நினைப்பவர்கள் கூட, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சியில் இந்த முறை 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறியுள்ளார். இவருடன் நடிகை சிருஷ்டி டாங்கே, பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியா என பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

கோமாளிகளாக முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேசி, சுனிதா, மணிமேகலை, தங்கதுரை ஆகியோர் உடன் புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிஷ சிவா, ஓட்டேரி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதுவரை கிஷோர், ராஜா ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையன் என 5 போட்டியாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பழம்பெரும் நடிகரும் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ், கலை இயக்குநரும் நடிகருமான கிரண் ஆகியோர் வையில்கார்ட் எண்ட்ரி கொடுத்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற இம்யூனிட்டி டாஸ்கில் சிருஷ்டி டாங்கே வெற்றிபெற்ற நிலையில் இந்த வாரம் மீதம் உள்ள 6 போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி நடைபெற உள்ளது. இந்த வாரம், எலிமினேஷன் வாரம் என்பதால் போட்டியாளர்களில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளனர். வெளியேறவுள்ள நபர் குறித்த தகவல்கள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வாரம் வாழைப்பழத்தை வைத்து சமைக்க சொன்னதாகவும் அதில் கஜேஷ் சிறப்பாக போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. கஜேஷ் வெளியேறுகிறாரா இல்லையா என்பது நாளைய எபிசோட் வெளியானதும் தெரியவரும்.

Related Post

தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி

Posted by - July 10, 2023 0
ரவீந்தர்-மகாலட்சுமி தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்துவிட்டார்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர்கள்…

தனது கணவர் தங்கையின் பிள்ளைகளுடன் நயன்தாரா.. அழகிய குடும்ப புகைப்படம்..

Posted by - July 29, 2023 0
நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 6 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடியின் திருமணம் கடந்த ஆனது பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்…

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - March 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - October 23, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது, ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தினரிடம் இருந்து தப்பிக்க அந்த வீட்டுப் பெண்களும் போராடி வருகிறார்கள். கொஞ்சம் எதிர்த்து அவர்கள் வெளியே வந்தாலும் முழுவதுமாக…

விடுதலை படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தங்கையா இது! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - May 18, 2023 0
பவானி ஸ்ரீ வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் பிரபல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *