கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: கோழிக்கோட்டில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு

203 0

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கு அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதில் நிபா வைரஸ் பாதித்து முதலில் பலியான மருதோன்கரை பகுதியை சேர்ந்த நபரின் 9 வயது மகன் மற்றும் மைத்துனருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 24 வயது மதிக்கத்தக்க சுகாதார பணியாளர், 39 வயது மதிக்கத்தக்க நபர் என மேலும் இருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு.. தமிழக எல்லை மாவட்டங்களில் சுகாதாரத்துறை  உச்சகட்ட அலர்ட் | Nipah virus outbreak in Kerala: Order to intensify  surveillance at Tamil Nadu border ...

இதனால் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புக்குள்ளான 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பொது மக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. டியூசன் மற்றும் பயிற்சி மையங்களும் மூடப்பட்டன. தொற்று பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.

நிபா வைரஸ் தொற்றுடன் காணப்பட்ட 23பேர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த பலருக்கு நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.

இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 9 பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் சந்தைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வங்கிகள் மற்றும் கருவூலங்கள் மதியம் 2 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் முக கவசம் அணிவது, சானிடைசரை பயன்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நிபா வைரஸ் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலில் நேற்றைய நிலவரப்படி 981 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

வியாழக்கிழமை சாய்பாபா வரலாறு….

Posted by - September 11, 2025 0
ஆரம்ப வாழ்க்கை சாய்பாபாவின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தெளிவாக தெரியவில்லை. 1838-ல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது மதம், குடும்பம் பற்றிய விபரம் மர்மமாகவே…

சொத்துக்கு சண்டைபோடும் மகன்களுக்கு தெரியாமல் இறந்த கணவர் உடலை எரித்த பெண்

Posted by - May 30, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டிகொண்டா அருகே உள்ள படம் பேட்டாவை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ண பிரசாத். இவர் பட்டிக்கொண்டா பஜாரில் மருந்து கடை நடத்தி…

ஜி20 மாநாடு எதிரொலி – பாதுகாப்பு பணியில் 1.30 லட்சம் போலீசார்

Posted by - September 8, 2023 0
புதுடெல்லி: ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10…

மணிப்பூரில் பாதுகாப்பு வீரர்கள்- துப்பாக்கி ஏந்திய கும்பலுக்கு இடையே கடும் சண்டை

Posted by - September 8, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது…

அலார்ட் மக்களே.. ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது.. ரிசர்வ் வங்கி அதிரடி!

Posted by - July 30, 2024 0
இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி ஆகஸ்ட் மாதம் வங்கிகள் 14 நாட்கள் இயங்காது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அந்த நாட்கள் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்கும் இயங்காது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *