கைவிடப்படுகிறதா சூர்யா – வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ – என்ன சொல்கிறார் தாணு

189 0

வாடிவாசல் கைவிடப்படுவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்துக்கு முன் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா ‘வணங்கான்’ படத்தில் நடித்துவந்தார். எதிர்பாராதவிதமாக இப்படத்திலிருந்து சூர்யா விலகினார். இயக்குநர் பாலா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் ஏற்பட்டுள்ளது. வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவெடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிப்பார் என ஒரு தகவல் பரவிவருகிறது.

இந்த அதிர்ச்சியிலிருந்தே சூர்யா ரசிகர்கள் வெளிவராதபோது மேலும் அதிர்ச்சி அளிக்கும்விதமாக வெற்றிமாறன் இயக்கத்திலிருந்து சூர்யா நடிக்கவிருந்த வாடிவாசல் திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் பரவியது. கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் சூர்யாவும் வாடிவாசல் பட ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் தாணு அந்த தகவலை மறுத்திருக்கிறார். ‘வாடிவாசல்’ பட முன்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாகவும், ‘விடுதலை’ படத்துக்கு பிறகு ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Related Post

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா..

Posted by - February 29, 2024 0
வைரல் புகைப்படம் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு…

ஜனநாயகனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா விஜய்.? லோகேஷ் உடைத்த சீக்ரெட்

Posted by - July 29, 2025 0
Vijay : விஜய் இப்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரது கடைசி படம் தான் ஜனநாயகன் என்று கூறப்படுகிறது. இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை…

விஜய் தேவரகொண்டா அறிவிப்பு.. ராஷ்மிகாவா.. சமந்தாவா..? குழப்பத்தில் ரசிகர்கள்

Posted by - August 30, 2023 0
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தொடர்ந்து இவர் நடிப்பில்…

அப்போ எனக்கு 17 வயசு… நகுல் ரொம்ப தொந்தரவு பண்ணினார்…. சுனைனா பகிர்ந்த தகவல்….!!

Posted by - July 31, 2024 0
திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம்…

ரஜினி – கமல் இணையும் படம்.. விருது விழாவில் உறுதி செய்த கமல்! – என்ன கூறினார் பாருங்க

Posted by - September 8, 2025 0
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *