கொஞ்ச நாட்களாகவே கோக்கு மாக்கா திரியும் விஷால்.. சந்தைக்கு போனும் காசு குடுன்னு வளர்ந்த தம்பி செய்யும் அக்கப்போர்

235 0

விஷால் வருடத்திற்கு ஒரு படங்கள் தான் நடித்து வருகிறார். கடைசியாக நடித்த படம் ரத்னம் அதுவும் சரியாக போகவில்லை. இப்பொழுது கைவசம் எந்த படமும் இல்லை. சுதா கொங்காரா இயக்கப் போகும் புறநானூறு படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு வந்திருக்கிறது, அதற்கும் 18 கோடிகள் கேட்டு வந்த வாய்ப்பை வீணடித்திருக்கிறார்.இப்பொழுது ஏவிஎம் நிறுவனம் அவரைத் தேடிச் சென்றிருக்கிறது. படம் பண்ணுவதற்காக கால்ஷீட் கேட்டதற்கும் 20 கோடிகள் சம்பளம் வேண்டும் என விடாப்பிடியாய் நிற்கிறாராம். ஒரு வழியா நடந்த பேச்சு வார்த்தையில் ஏவிஎம் நிறுவனமும் 20 கோடிகள் கொடுக்க சம்மதித்துள்ளனர்.

அட்வான்ஸ் ஆக 5 கோடியும், ஷூட்டிங் நேரத்தில் ஐந்து கோடியும், படம் முடிந்த பிறகு 5 கோடிகளும், அதன் பின் டப்பிங் பேசுகையில் ஐந்து கோடிகளும் என மொத்தம் 20 கோடிகள் பிரித்து தருவதாக கூறியிருக்கிறார்கள் ஏவிஎம் நிறுவனம். ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காத விஷால் உடனடியாக 10 கோடிகள் கேட்டுள்ளார்.தனக்கு பத்து கோடிகளுக்கு அவசர செலவு இருப்பதாகவும். அந்த கமிட்மெண்டை முடிக்க வேண்டும் என்று அவசரப்படுத்தி இருக்கிறார். தன்னைத் தேடி வரும் அனைவரிடமும் இப்படித்தான் கராராக பேசி வருகிறாராம். ஏற்கனவே புறநானூறு வில்லன் வாய்ப்பு பறிபோனது இப்பொழுது இந்த வாய்ப்பும் கேள்விக்குறியானது.

விஷாலுக்கு அப்படி என்ன அவசரமான செலவு, பத்து கோடிகள் கேட்டு அவசரப்படுத்துகிறாரே என்று விசாரித்தால், அவர்களுக்கு அதன் பின் தான் காரணம் தெரிந்திருக்கிறது. ஏற்கனவே அவர் மிஸ்கினுடன் சண்டை போட்டதற்குப்பின் துப்பறிவாளன் படம் இரண்டாவது பாகம் நிலுவையில் உள்ளது. அந்தப் படத்தை விஷாலே இயக்குகிறார். நிதி நெருக்கடியில் இருக்கும் அந்த படத்திற்கு தான் இவ்வளவு அவசரமாக பணம் தேவைப்படுகிறது.

Related Post

எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா

Posted by - October 7, 2023 0
அயலான் முன்னணி தமிழ் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் சிறப்பான…

என்னது வாரணம் ஆயிரம், பொல்லாதவன் பட புகழ் நடிகை ரம்யா மரணமா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - September 6, 2023 0
திவ்யா ஸ்பந்தனா தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் படங்களான வாரணம் ஆயிரம் மற்றும் பொல்லாதவன் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா திவ்ய…

இலங்கை பெண் ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்- என்ன தெரியுமா?

Posted by - November 4, 2023 0
விஜய்யின் லியோ கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமாவில் டாப் நாயகன் விஜய் நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

சூரரைப்போற்று நடிகையிடம் அத்துமீறல்.. மன்னிப்பு கோரிய சட்டக்கல்லூரி மாணவர் சங்கம்..

Posted by - January 21, 2023 0
அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அந்த மாணவர், அவரை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார் மாணவர் ஒருவர் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *