கொண்டைக்கடலை… ஊற வெச்சு சாப்பிட்டாலே ஆயுசு கூடும்.. ஹீமோகுளோபின் குறைபாட்டை தீர்க்கும் கொண்டைக்கடலை

441 0

சென்னை:

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், கட்டாயம் சாப்பிட வேண்டிய பயிறுதான் கொண்டைக்கடலை.. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக தரும் இந்த பயிறு பற்றின நன்மைகள் என்னென்ன தெரியுமா?

புரோட்டீன், மாவுச்சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து, தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் என அத்தனையும் அடங்கியதுதான் கொண்டைக்கடலை.

1 கப் கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. அதனால்தான், உடல் எடையை குறைப்பதில், இந்த பயிறுக்கு முக்கிய பங்குண்டு..கொண்டைக்கடலை... ஊற வெச்சு சாப்பிட்டாலே ஆயுசு கூடும்.. ஹீமோகுளோபின் குறைபாட்டை தீர்க்கும் கொண்டைக்கடலை | Do you know Health Benefits of Chickpeas and Black Soaked ...

கொழுப்பு சத்துக்கள்:

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுப்பதுடன், வயிற்றில் குடல் பகுதியில் வரும் புற்றுநோயை தடுக்கக்கூடிய தலைசிறந்த பணியை இந்த கடலை செய்கிறது.. ஓரளவு கொழுப்பு இருந்தாலும்கூட, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், சாப்பிடக்கூடிய பயிறு வகையாகும்.. கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பயிறு நல்லது. தினமும் 30 கிராம் நார்ச்சத்து எடுத்துக்கொண்டால், டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தை குறைப்பதாக 2014 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நிரூபிணம் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கொண்டை கடலை எளிதாகவே கிடைக்கும்.. இதில், சிறிய அளவிலான கறுப்பு கொண்டைக் கடலையில் நிறைய நார்ச்சத்து இருக்கிறதாம். அதனால், இந்த கடலையை முளைக்கட்டி சாப்பிடும்போது, கொழுப்பு வெகுவாக கரைந்துவிடுகிறது.. இதிலுள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வலிமையை அதிகரிக்க செய்கிறது..

புற்றுநோய்:

அதேபோல, மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் போராடக்கூடியது இந்த பயிறு.. ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இந்த கொண்டைக்கடலையை முளைகட்டி சாப்பிட்ட வரலாம்.. அல்லது, கொண்டைக்கடலையை வேகவைத்து, அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டாலும், நல்ல பலத்தை கொடுக்கும்..

தலைமுடி உதிர்வு நிறைய இருப்பவர்கள், புரோட்டீன் அதிகமுள்ள இந்த கொண்டைக்கடலையை சாப்பிட்டு வரலாம்.. அடிக்கடி சமையலில் கொண்டைக்கடலையை சேர்த்து வந்தால், தலைமுடியும் சீக்கிரத்தில் நரைக்காது..

அதேபோல, சரும ஆரோக்கியத்தையும் இந்த பயிறு பாதுகாப்பதால், முதுமை தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியது.

வாதநோய்:

ஆனால், காலையில் கொண்டைக்கடலையை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.. சிறுநீரகக்கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாக இதனை தவிர்க்க வேண்டும். அதேபோல, வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்களும் இதனை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அஜீரணம் ஏற்படும்.. வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம்.

Related Post

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️

Posted by - March 3, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️ மேஷம்✅ பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு…

என்ன செய்தாலும் நீங்க சுடும் சப்பாத்தி சாஃப்டா வரலையா..? அப்போ இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க..!

Posted by - February 2, 2024 0
என்னதான் தினமும் சப்பாத்தி சுட்டாலும் அதை சாஃப்டான பக்குவத்தில் சுட பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் அது அவ்வளவு பெரிய இரகசியமும் கிடையாது. மாவு பிசையும்போது சில விஷயங்களை…

தொண்டை வலியால் அவதியா..? சட்டுனு கேட்கும் வீட்டு வைத்தியங்கள்..!

Posted by - December 17, 2025 0
திடீரென ஏற்படும் தொண்டை வலி பலருக்கும் பெரிய தொந்தரவாக மாறுகிறது. காலநிலை மாற்றம், குளிர்ந்த உணவுகள், வைரஸ் தொற்று, தூசி அல்லது அலர்ஜி காரணமாக இந்த பிரச்சனை…

பிக் பாஸில் தினேஷ்.. ரச்சிதா பற்றி மறைமுகமாக சொன்ன விஷயம்

Posted by - October 30, 2023 0
நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என ரச்சிதா பல முறை…

Water Heater வாங்குறதுக்கு முன் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Posted by - December 23, 2025 0
குளிர்காலம் ஆரம்பிச்சுடுச்சா, வீடுகள்ல முதல் தேவை Water Heater (Geyser) தான். ஆனா மார்க்கெட்டுல இருக்குற நிறைய options-ல எது சரி, எது safe, எது current…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *