சதுரங்கவேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி மோசடி-2 பேர் கைது

363 0

வந்தவாசி:

விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். வந்தவாசி தாலுகா அலத்துரை கிராமத்தை சேர்ந்த காண்டீபன் (வயது 40), திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (50) ஆகியோர் தங்களிடம் இரிடியம் கண்டுபிடிககும் ரைஸ் புல்லிங் எந்திரம் இருப்பதாக தெரிவித்தனர். அவர்களிடம் சங்கர் கணேஷ் ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் காட்டிய ரைஸ் புல்லிங் எந்திரத்தை பார்த்தபோது அதில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சங்கர்கணேஷ் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வந்தவாசி போலீசார் ஆரியாத்தூர் கிராமத்திற்கு சென்று காண்டீபனை கைது செய்து ரைஸ் புல்லிங் எந்திரம் மற்றும் உபகரணங்களை கைப்பற்றினர். மேலும் போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடிய குணசேகரனை விரட்டி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. காண்டீபன் செங்கல்பட்டு மாவட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் போலி டாக்டராக மருத்துவம் பார்த்தபோது ஒரத்தி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குணசேகரன் மீது திருவண்ணாமலை போலீசாரால் தொடரப்பட்ட சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு, தஞ்சாவூர், சென்னை புரசைவாக்கம், தர்மபுரி, அரியலூர், புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரைஸ் புல்லிங் எந்திரம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து போலி ரைஸ் புல்லிங் எந்திரம், ரூ.20 ஆயிரம், ஒரு மோட்டார்சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். சதுரங்க வேட்டை படத்தில் கலசத்தை வைத்து ஏமாற்றும் காட்சி போல் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

Posted by - July 2, 2025 0
சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

Posted by - December 26, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வால்மீன்கள்…

மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு

Posted by - May 29, 2025 0
தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தன்னை சந்திக்க யாரும்…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Posted by - September 26, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்…

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு – தவெக மாநாட்டில் விஜய் போட்ட அரசியல் அணுகுண்டு

Posted by - October 28, 2024 0
தன்னுடைய அடுத்த செயல்திட்டம் என்பது அரசியல் அணுகுண்டு எனக்கூறி, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும் என விஜய் தெரிவித்தார். தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *