சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான்.. காரணம் என்ன

79 0

சித்தாரே ஜமீன் பர்

இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளிவந்த படம் சித்தாரே ஜமீன் பர். இப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து ஜெனிலியா நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. 10 நாட்களில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை அள்ளியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் என்றும் ஆனால், அமீர் கானின் திடீர் முடிவால் அனைத்தும் மாறிவிட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதைப்பற்றி அமீர் கான் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் இதற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதகவது:

“லால் சிங் சத்தா படத்திற்கு பின் சினிமாவிலிருந்து பிரேக் எடுக்க முடிவு செய்தேன். இதை இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னாவிடமும் தெரிவித்தேன். நடிகராக அல்லாமல் தயாரிப்பாளராக தொடருங்கள் என அவர் கூறினார். அதற்கு ஒப்புக்கொண்டேன். சித்தாரே ஜமீன் பர் படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கலாம் என முடிவு செய்து, சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரிடம் கதை சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் இப்படத்தின் கதை பிடித்துப்போக, அவர்களின் கால்சீட் வாங்கினோம்”.”ஆனால், ஒரு கட்டத்தில் இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போக, இதில் ஏன் நாமே நடிக்கக்கூடாது என தோன்றியது. அந்த அளவிற்கு எனக்கு கதை பிடித்திருந்தது. இதை இயக்குநர் பிரசன்னாவிடம் கூறினேன். அவரும் சரி என்றார். இதன்பின் சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் இருவரிடமும் இதை பற்றி கூறி மன்னிப்பேன் கேட்டேன். முதலில் அவர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்தாலும், பின் எனது சூழ்நிலையை புரிந்துகொண்டனர்”. என அமீர் கான் கூறியுள்ளார்.

Related Post

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - September 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Posted by - March 28, 2025 0
விஜய் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போகிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன்பின் முழுமையாக அரசியல் மட்டும் தான் என்று…

ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

Posted by - February 11, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா…

நடிகராக என்ட்ரி கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா

Posted by - March 28, 2023 0
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.…

தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு மீண்டும் எதிர்ப்பு

Posted by - May 22, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *