சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

322 0

சென்னை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் மழை குறைந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதத்தில் (நவம்பர்) பரவலாக மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் (டிசம்பர்) தொடக்கத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. அதிலும் சமீபத்தில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த மழை சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை துவம்சம் செய்தது.சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் |  Chance of rain again in TN on 18th 19th and 20th

இன்னும் அந்த வடு மறையாத நிலையில், மீண்டும் சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. வங்கக்கடல் பகுதியில் வருகிற 18-ந்தேதி அல்லது அதற்கு பிறகு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அதன் காரணமாக தமிழ்நாட்டில் 18-ந்தேதியில் இருந்து 20-ந் தேதி வரையில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும், அதன்பிறகும் மழை தொடருவதற்கான சூழல் இருக்கிறது என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் கண்டிப்பாக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் பெரிய அளவுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை. ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Post

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - September 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

சூறாவளிக்காற்று.. இடி மின்னலுடன் மழை.. புது அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 20, 2022 0
weather update | சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என…

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…

விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - December 10, 2024 0
இதக்கூட கவனிக்க மாட்டிங்களா என்று உளவுத்துறை தலைமையை அழைத்த ஸ்டாலின் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் வேங்கைவயல் விவகாரத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *