டிசம்பர் 2024 முடிவதற்குள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான 2 வேலைகள்: இதுதான் கடைசி வாய்ப்பு..

206 0

இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் ஆதார் (aadhaar) மற்றும் பான் (pan) கார்டு சார்ந்த பணிகளை முடிக்க வேண்டும். குறிப்பாக இலவச ஆதார் அப்டேட் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று பார்க்கலாம்.1.பான்-ஆதார் இணைப்பு (aadhaar pan card link): வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆதார் கார்டை (Aadhaar Card) பான் கார்டுடன் (pan card) இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆதார் உடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் சோதனை செய்யப்படும், வருமான வரி விவரங்கள் எளிமையாகச் சோதனை செய்யப்படும், இதுதவிர பான் கார்டை வைத்துச் செய்யப்படும் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு பான் செயல் இழக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதால் பான் தகவல்கள் கூடுதல் பாதுகாப்பு உடன் இருக்கும். எனவே ஃபின்டெக் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாது. ஒருவேளை ஃபின் டெக் நிறுவனங்கள் முறையாக உங்களிடம் வாங்கிய டேட்டா மூலம் தொடர்ந்து கால் செய்யலாம். அதேசமயம் உங்கள் பான் விவரங்களை அவர்கள் வேறு வழியில் வாங்கி இருந்தால் அதைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியாது.அதேபோல் 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் உடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்போது இந்த விதிமுறை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.மேலும் வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலுக்கு (Income Tax e-filing portal) சென்று தேவையான விவரங்களைக் கொடுத்து ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க முடியும்.2.இலவச ஆதார் அப்டேட் (aadhaar free update): உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 14-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.குறிப்பாக 10 வருடங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஆதார் விவரங்களை தற்போது அப்டேட் செய்து வைக்குமாறு UIDAI பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் ஆதார் அட்டையில் உள்ள தங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற சில விவரங்களை மட்டும் தற்போது ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் ஆதாரிலுள்ள கருவிழி, கைரேகைகள், மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் போன்றவற்றை ஆஃப்லைன் முறை மூலமாக மட்டுமே உங்களால் அப்டேட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களைச் செலவின்றி அப்டேட் செய்ய விரும்பினால் myaadhaar.uidai.gov.in என்ற UIDAI இணையதளத்துக்குச் செல்லுங்கள். இந்த இணைய தளத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைக் கொடுத்து இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய முடியும்.

Related Post

பழைய டிவி காலி.. வெறும் ரூ.18,000 பட்ஜெட்ல 43 இன்ச் QLED டிவி.. 40W டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?

Posted by - December 11, 2024 0
பழைய டிவிய மாத்த வேண்டியதுதானு, உங்களையே சொல்ல வைக்கும்படியான பட்ஜெட்டில் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி (43 inch Infinix QLED TV) ஆர்டருக்கு வந்துள்ளது.…

Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..!

Posted by - February 6, 2026 0
 Hyundai i20 2026 Price Change: இந்திய சந்தையில் மாருதியின் பலேனோ,டாடாவின் ஆல்டோஸ் உடன் மோதும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஐ20 காரின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது. 25 ஆண்டுகளில்…

2030-ல் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடம் பிடிக்கும்: சர்வதேச நிறுவனம் தகவல்

Posted by - October 25, 2023 0
புதுடெல்லி: உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது. ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா தற்போது 5-வது…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

ஆணுறுப்பில் 26 ஸ்டேபிளர் பின், மிளகாய் பொடி.. சித்ரவதை செய்து ரசித்த சைக்கோ தம்பதி – கேரளாவில் நடந்தது என்ன?

Posted by - September 16, 2025 0
கேரளாவில் இளைஞர்களை ஏமாற்றி வீட்டிற்கு வரவழைத்து அவர்களது ஆணுறுப்பில் ஸ்டேபிளர் பின் அடித்தும், மிளகாய் பொடி தூவியும் அவர்களை சித்ரவதை செய்த சைக்கோ கணவன் – மனைவியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *