வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது. வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் சினிமா பார்த்து விட்டு நள்ளிரவு குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது. இதுபோல் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவில் வழக்குகளில் தலையிடுவதாகவும், வக்கீல்களை தரக்குறைவாக பேசுவதாகவும் வக்கீல்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் போலீசாரின் நடவடிக்கைகளை கண்டித்து தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகம் முன்பு இன்று காலை வக்கீல்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்க தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். சுமார் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு பணியை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் கோர்ட்டு வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அப்போது போலீசருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்ததும் தாம்பரம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் கூட்டத்தின் உள்ளே சென்று உதவி கமிஷனரை பத்திரமாக அழைத்து வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Post
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி! அண்ணாமலை பதவி பறிக்கப்பட்ட உடனே அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதை அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவித்தனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…
பிளஸ் 2 பொதுத் தேர்வு ரிசல்ட்..
தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 72 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுத்துறை இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய தளங்களில்…
சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்
சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம்…
சென்னையில் இருந்து விலகி சென்றது மிச்சாங் புயல்
சென்னை: மிச்சாங் புயல் சென்னை அருகே வந்து மழை, காற்றால் துவம்சம் செய்தது. பின்னர் சென்னையில் இருந்து விலகி ஆந்திராவுக்கு சென்றது. நெல்லூர்-காவாலி இடையே இன்று (செவ்வாய்க்கிழமை)…
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது: சுற்றுலா பயணிகள் பீதி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கிழக்கே வங்க கடலும் தெற்கே இந்திய பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் அமைந்து உள்ளன. இதனால் இந்த முக்கடல் சங்கமத்தை பார்த்து ரசிப்பதற்காக இந்த 3…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (469)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (282)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

- சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

- TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

- கும்பகோணம் த.வெ.க வேட்பாளர் புது முயற்சி….

- இன்று தமிழ் புத்தாண்டு! உற்சாகமாக கொண்டாடும் தமிழர்கள்!

