திக் திக் டிட்வா…சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் – வெதர்மேன் அலர்ட்

152 0

டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக டெல்டா வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அக்டோபர் மாதம் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி தமிழகத்தில் மழை பெய்த நிலையில், நவம்பர் மாதம் முதல் 15ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நீடித்தது. இதனையடுத்து வங்க கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வ பகுதியால் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டியது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை கடந்து நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் சூறைக்காற்றோடு மழையானது நேற்று காலை முதல் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த புயல் தற்போது டெல்டா மாவட்டங்கள் அருகே நிலவி வருகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை வட மாவட்டங்களான சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், டிட்வா புயல் இன்று (29.11.2025) காலை 5:30 மணி நிலவரப்படி நாகைக்கு தெற்கே-தென்கிழக்கே 190 கிமீ, காரைக்கால் 200 கிமீ தொலைவில் மையம்கொண்டுள்ளது. நாகை மாவட்டம் தோபுத்துறையில் 18 செ.மீ, நாலுவேலுபதி 17 செ.மீ தற்போது வரை பதிவாகியுள்ளது.

சென்னையில் 2நாட்களுக்கு கனமழை

இப்புயல் தொடர்ந்து வடக்கு திசையில் பயணித்து அடுத்த சில மணி நேரங்களில் டெல்டா கடற்கரை அடைந்து வலுபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். டெல்டாவில் புயலின் முன்பகுதி நிலப்பகுதியில் ஊடுருவலை ஏற்படுத்தும் என எதிர்பபார்க்கப்படுவதாகவும்,தற்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை துவங்கியுள்ளது, வரும் மணி நேரங்களில் படிப்படியாக அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். புயல் மேற்கு டெல்டாவில் கரையேறும் போது இன்று (நவம்பர் 29) பகலில் அதிகனமழை பெய்யும் என தெரிவித்துள்ளவர் காவிரி டெல்டா மக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார். காவிரி டெல்டாவில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு இன்று மாலை அல்லது இரவு முதல் புயல் மீண்டும் வடக்கு திசையில் பயணிக்க துவங்கும். அப்போது சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் வரும் மணி நேரத்தில் மழை துவங்கி இன்று (29.11.2025) இரவு முதல் (01.12.2025) காலைக்குள் பரவலாக கன முதல் மிக கனமழையும், அதித கனமழையும் ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் காவிரி படுகை மாவட்ட மக்கள் இன்று வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Post

எம்.ஜி.ஆர்., ஆக முயன்று தோற்ற மு.க. முத்து – தந்தை கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. ஜெ., உதவி

Posted by - July 19, 2025 0
மறைந்த முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி. ஆரை போலவே திரைப்படங்களில் நடித்து பிரபலமாக முயன்று மு.க. முத்து தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. MK Muthu Died: மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்

Posted by - June 3, 2025 0
கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கன்னட திரைப்பட சங்கத்திற்கு கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் தக்…

மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை: சம்மன் அனுப்பி அழைக்க இருப்பதாக போலீசார் தகவல்

Posted by - November 22, 2023 0
சென்னை: நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்…

மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல்? -அண்ணாமலை கேள்வி!

Posted by - April 10, 2024 0
தமிழகத்தின் மலைக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் கூட சாலை வசதிகள் கிடைக்காமல் இருப்பதே, இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்த ஆட்சிகளின் அவல நிலைக்குச் சான்று என…

அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு – அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?

Posted by - May 27, 2025 0
#TNBJP #ANNAMALAI #MODI #TNPOLITICS #AIADMK #DMK #BJP #INDIA #CONGRESS #PIXELTV #PIXELMEDIA சென்னை திருவான்மியூரில் நடந்த பாஜக கருத்தரங்கிற்காக வைக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலையின் படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *