திமுகவுக்கு கவுன்ட் டவுன்..

87 0

 தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார்.

தமிழ் நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவித்து ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதோடு…திமுக ஆட்சிக்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது என்று மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்

வளர்ச்சி மனிதன் எம்.ஜி.ஆர்

2026 ஆம் ஆண்டிலேயே எனது முதல் பயணம் இது, தமிழ்நாடு முழுவதும் பொங்கலுக்கு பிறகு சிறப்பான மகிழ்ச்சி பிறந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி மனிதன் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடினோம். ராமனின் திருவடிகளில் நான் தலை வணங்குகிறேன், அதுமட்டுமல்லாமல் அனைவரின் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காவும் நான் வேண்டிக்கொள்கிறேன்.

இன்று நேதாஜி அவர்களின் பிறந்த நாளும் கூட தமிழ்நாட்டில் இருந்து பல சுதந்திர போராட்ட தியாகிகள் அவருடன் போராடினர். வீரம் மற்றும் நாட்டுப்பற்று தமிழ்நாட்டு மக்கள் நாடி நரம்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த புனிதமான மண்ணில் இருந்து நான் எனது நினைவாஞ்சலியை காணிக்கையாக்குகிறேன் .

மாற்றத்துக்கு தயாராகும் தமிழ்நாடு:

இங்கு அலைக்கடலென திரண்டிருக்கும் மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும், தேசத்திற்கு ஒரு செய்தியை தருகிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்கு தயாராகிவிட்டது, திமுகவின் மோசனமான ஆட்சியிலிருந்து விடுபட துடிக்கிறது.

மேலும் பாஜக எண்டிஏ தலைமையிலான கூட்டணியை விரும்புகிறது. இந்த மேடையில் இருக்கும் அனைவரும் ஒரே முடிவில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுக்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டில் உள்ளார்கள்.

திமுகவுக்கு கவுண்ட் டவுன்;

தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. நீங்கள் திமுகவுக்கு 2 முறை வாய்ப்பு அளித்தீர்கள், ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இளைத்துவிட்டார்கள்.வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக, ஆனால் செய்த பணிகள் பூஜ்யம்தான்.

திமுக ஆட்சியை CMC ஆட்சி என்று சொல்கிறார்கள், அதாவது ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை(corruption, mafia, crime) ஆதரிக்கும் அரசு. திமுகவின் ஊழல் அரசை வேரோடு கிள்ளி ஏறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது.

ஒரு குடும்பத்துக்கு மட்டுமே அரசு

இன்று தமிழ்நாட்டில் ஜனநாயகம்…நம்பகத் தன்மை இல்லை. ஒரு குடும்பத்துக்கு மட்டுமே அரசு இயங்குகிறது. வாரிசு அரசியல்… நடக்கிறது. நம் கலாச்சாரத்தை சிதைக்கும் அரசு நடக்கிறது. ஊழல் மூலம் வரும் பணம் எங்கே செல்கிறது என இங்குள்ள சிறு குழந்தைக்கும் தெரியும் என்றார்.

தமிழ்நாட்டிற்கு பாஜக கொடுத்த திட்டங்கள்

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தேஜக பல விஷயங்களை தமிழக அரசின் நலனுக்கு பல விதங்களில் உதவி இருக்கிறது.

தமிழ்நாட்டின் முக்கிய பலமே விவசாயிகள் தான். அவர்களுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததுள்ளது. பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாஜக அரசு விவசாயிகளுக்கான அரசு, அவர்களின் வாழ்க்கை சிறக்க தொடர்ந்து பாடுபடும் அரசாக உள்ளது. விவசாயிகள் நாட்டின் சொத்து, அவர்களை பாஜக அரசு எப்போதும் கைவிடாது.

எடுத்துக்காட்டாக திமுக மற்றும் காங்கிரஸ் அரசு கூட்டணியை விட தேஜகூ தமிழக ரயில்வே திட்டத்துக்கு அளித்த தொகை பல மடங்கு அதிகம், தமிழகத்தின் பலம் விவசாயிகள் மற்றும் மீனவர்கள்.  அவர்களுக்கு தேஜகூ பல விதங்களில் உதவி வருகிறது

Related Post

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி

Posted by - November 24, 2025 0
ஒவ்வொருவருக்கும் நிரந்த வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார் நிச்சயம் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார் மீண்டும் மக்களை சந்தித்த விஜய்…

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - April 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

Posted by - January 7, 2026 0
கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும்…

பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!

Posted by - January 9, 2026 0
ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது – அன்புமணி. பணி நிரந்தரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *