திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி டெல்லி மாணவி கொலை

290 0

டெல்லியை சேர்ந்த இளம்பெண் நர்கிஸ் (25). இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள கமலா நேரு கல்லூரியில் படிப்டை முடித்துள்ளார். பின்னர், மாளவியா நகரில் உள்ள ஸ்டெனோகிராஃபர் பயிற்சியில் நர்கிஸ் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், நர்கிஸ்க்கும் அவரது உறவினரான இர்பானுக்கும் திருமணம் செய்து வைக்க பேசப்பட்டுள்ளது. ஆனால், இர்பானுக்கு சரியான வேலை இல்லாததால் நர்கிசுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை. A policeman was killed by an iron rod | இரும்பு கம்பியால் தாக்கி  போலீஸ்காரர் கொலை; 2-வது மனைவியிடம் போலீஸ் விசாரணைஇதனால், நர்கிஸ் இர்பானிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இர்பான், பயிற்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நர்கீஸை வழிமறித்த இர்பான் தன்னிடம் பேச வேண்டும் என்றும் பூங்காவிற்குள் வரும்படியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் நர்கீஸ் வர மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரடைந்த இர்பான் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து நர்கீசை சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இர்பான் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, நர்கிஸ் தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் கொலை செய்ததாக இர்பான் போலீசில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், தேசிய தலைநகரான டெல்லி மிகவும் பாகாப்பற்று இருப்பதாக தெரிவித்தார். டெல்லி காவல்துறையின் பொறுப்புணர்வை சரிசெய்வதற்கு முன்பு இன்னும் எத்தனை இறப்புகள் நிகழ வேண்டும் என்று நான் மையத்திடம் கேட்க விரும்புகிறேன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Post

தொடர் வீழ்ச்சிக்கு பிறகு மீளும் பங்குச்சந்தைகள்….. முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட எந்த பங்கை வாங்கலாம்…

Posted by - August 7, 2024 0
அமெரிக்காவில் சாத்தியமான பொருளாதார மந்தநிலை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களினால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3 நாட்களாக பெரும் வீழ்ச்சி அடைந்தன. இந்த…

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா?

Posted by - July 27, 2023 0
மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை…

“யாரும் தாக்குதலை நிறுத்துமாறு கூறவில்லை, பாகிஸ்தானே கெஞ்சியது“ – ட்ரம்ப் பேச்சுக்கு மோடி பதிலடி

Posted by - July 30, 2025 0
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விளக்கமளித்த பிரதமர் மோடி, ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். அது குறித்து அவர் என்ன கூறினார் என்பதை…

தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்

Posted by - November 17, 2023 0
புதுடெல்லி: சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன்…

காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்

Posted by - February 20, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *