தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.?

89 0

தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் சம்பவம் நிகழ்ந்த அடுத்த நாளில் தூத்துக்குடியில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மாணவி கொலை காவல்துறை மெத்தனம்

பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும்,தமிழகத்தில் தினசெய்தியாகி விட்ட நிலையில், சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. இந்த வெட்கக்கேடான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.பத்தாம் வகுப்பில் நன்கு படித்து மாவட்ட அளவில் பரிசு பெற்று, தற்போது 12-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியைக் காணவில்லை என்று புகாரளிக்க பெற்றோர் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, மிகவும் அலட்சியமாகவும், காணாமல் இருந்த பெண்ணை சந்தேகிக்கும் வகையிலும் காவல்துறை செயல்பட்டதாக வரும் தகவல்கள், திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இன்றி சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாகவும், அவர்களிடம் காவல்துறையும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. குற்றவாளிகளை உடனே கண்டறிந்து விட்டால், உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர். இதற்கு ஏன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா?

குற்றவாளிகளை உடனே கைது செய்யனும்

வேடநத்தம் பாலியல் கொலைக் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென  திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Post

’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் – திருவாரூர்ன்னா சும்மாவா?

Posted by - September 22, 2025 0
‘விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’ தமிழக…

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…

“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

Posted by - March 27, 2026 0
சென்னை: “நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த…

சிட்டியில் DMK ஆட்டம் ஓவர்? 16 தொகுதிகளில் 14ல் சிக்கல், லட்சத்தில் காலி

Posted by - February 24, 2026 0
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது. TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான…

’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!

Posted by - September 6, 2025 0
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது என்பதை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அறிவார்கள் என்றும், எங்களுக்கு என்ன இடர்பாடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *