நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

177 0

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய நபர்களான திருவேங்கடம் மற்றும்  நாகேந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து மரணித்துள்ள நிலையில்,  ஆர்ம்ஸ்ட்ராங்  கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றவே கூடாது என மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மல்லுக் கட்டியது திமுக அரசு என தெரிவித்துள்ளார்.

ஆனால், மாண்பமை உச்சநீதிமன்றமோ சிபிஐ விசாரணைக்கு பச்சைக் கொடி காண்பித்து ஆளும் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்துவிட்டது – சபாஷ்! மேலும், எம்பெருமான் முருகனின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் மலையின் நிறத்தை மாற்றுவதற்கு முரண்டு பிடித்தவர்களைக் கண்டிக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்தது இந்த மதம் பிடித்த திமுக அரசு. ஆனால், மாண்பமை மதுரை உயர்நீதிமன்றமோ “திருப்பரங்குன்ற மலை என்ற இயற்பெயரே இனி தொடரும், அங்கே ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிடக் கூடாது” என்றொரு தீர்ப்பை வழங்கி, குன்றம் முழுதும் குமரனுக்கே சொந்தம், என்பதை உறுதிப்படுத்திவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிளவுவாத அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் திமுகவிற்கு இந்நேரம் இரத்த அழுத்தம் எகிறியிருக்கும் – சபாஷ்! அடுத்ததாக, நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த சிறுநீரகத் திருட்டுகள் குறித்து இதுவரை ஒரு FIR -ஐ கூடப் பதிவு செய்யாத ஆளும் அரசின் அலட்சியத்திற்கு குட்டு வைக்கும் வகையில், இவ்விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்.

ஆனால், திமுக அரசோ எங்கள் ஆட்சியில் நடந்த குளறுபடிகளை விசாரிக்க நாங்களே தான் அதிகாரிகளை நியமிப்போம் என மண்டையைத் தேய்த்துக் கொண்டே மாண்பமை உச்சநீதிமன்றத்திற்கு சென்று அடம் பிடித்தது. ஆனால், மாண்பமை உச்சநீதிமன்றமோ “சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாங்கள் தலையிட மாட்டோம்” எனக் கூறி ஆளும் அரசுக்கு பெரிய குட்டு வைத்து அனுப்பிவிட்டது – சபாஷ்!

இறுதியாக, “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் வரம்பிற்கு கீழ் வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஏன் அதை விசாரித்தது?” என்ற கிடுக்கிப்பிடி கேள்வியால் தமிழக அரசை சுற்றி வளைத்துள்ளது மாண்பமை உச்சநீதிமன்றம். கரூரில் நிகழ்ந்த துர்மரணங்களின் கறைகளைத் தங்கள் கரங்களிலிருந்து கழுவி விடுவதற்காக எதிர்தரப்பினரை குற்றவாளி கூண்டில் நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசோ இதற்கு பதில் சொல்லத் தெரியாமல் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருக்கிறது – சபாஷ்! என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து சட்டத்தின் சவுக்கடிகளால் சல்லி சல்லியாக நொறுங்கிப் போய் கிடக்கும் கழகக் கண்மணிகளே இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளுங்கள்! “மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமெதற்கு?” “சிபிஐ விசாரணையைக் கண்டு இத்தனை பதற்றமெதற்கு?” “தொட்டதெற்கெல்லாம் நீதிமன்றங்களை நாடி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவது ஏன்?” போன்ற மக்களின் பல கேள்விக் கணைகள் இனி உங்களை விடாது துளைக்கப்போகின்றன என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Post

“பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்”- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

Posted by - October 11, 2025 0
த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்…

செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்… தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்

Posted by - November 27, 2025 0
சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு இணையவுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில…

ஈபிஎஸ் உடன் தங்கமணி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்

Posted by - August 25, 2025 0
முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிருப்தி காரணமாக திமுகவில் இணையவுள்ளார் என்று தகவல் சர்ச்சை கிளம்பியிருந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன்  சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொண்டார் அதிமுக…

விண்டேஜ் கார் ஓட்டுவதையும், சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் பதிவிட்டு விளையாடுவதா.!

Posted by - January 12, 2026 0
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, 3 மாத காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொலை சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அதிகாலையில் ரவுடி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தலைநகர்…

பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

Posted by - February 7, 2026 0
6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா… அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *