பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

185 0

Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி மஹாராஜ் சிவாஜி முனையம் மற்றும் ஆசாத் மைதானத்தின் நெருக்கமான சந்தை பகுதிகளில், தனியாக அமைதியாக நின்று கொண்டு, சாலையில் செல்லும் யாரையும் அதிகமாக தொந்தரவு செய்யாமல் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்.

பிச்சை தானே எடுக்கிறார், இவரிடம் என்ன இருந்து விட போகிறது என யாரும் தவறாக நினைத்து விட வேண்டும், மும்பையில் இரண்டு பிளாட்டுகள் சொந்தமாக வைத்து இருக்கிறார், இரண்டு கடைகளை மாதம் 30,000 ரூபாய்க்கு சந்தையில் வாடகைக்கு விட்டு இருக்கிறார், பணத்தை பல நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து இலாபகரமாக மாற்றி வருகிறார்.இவருடைய சொத்து மதிப்பு மட்டு தற்போதைய மதிப்பில் 7.5 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது, இவர் ஒன்றும் அந்த அளவிற்கு பிறப்பிலேயே பணக்காரர் இல்லை, ஏழ்மையான குடும்பம் தானாம், நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் மக்கள் கூடும் இடங்களாக பார்த்து பிச்சை எடுப்பாராம், நாள் ஒன்றுக்கு ரூ 2000 முதல் ரூ 2500 வரை அதன் மூலம் வருமானம் ஈட்டுவாராம்.

மாதத்திற்கு என்று கணக்கிட்டால் ரூ 60,000 முதல் 75,000 வரை சம்பாதிப்பாராம், இவருடைய சம்பளத்தை இன்று இந்தியாவில் இருக்கும் 60% பொறியாளர்கள் கூட நெருங்க முடியாததாக இருக்கிறது, இவர் கிட்டத்தட்ட 40 வருடங்களாக பிச்சை எடுத்து வருகிறாராம், பிச்சை என்பதை ஒரு அன்பாக வேண்டுதலாக பாரத் ஜெயின் பார்ப்பதாக கூறுகிறார், இதன் மூலம் பலருக்கும் பல உதவிகளையும் செய்து வருவதாக தகவல்.

” பாரத் ஜெயின் மட்டும் அல்ல, சம்பாஜி காலே, லெட்சுமி தாஸ் உள்ளிட்ட பிச்சை காரர்களும் 1 கோடி முதல் 1.5 கோடி வரை நிகர சொத்துக்களை கொண்டு இருக்கிறார்களாம் “

Related Post

திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!

Posted by - August 2, 2024 0
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல…

இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

Posted by - January 6, 2025 0
சீனாவில் HMPV வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இந்தியாவில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சீனாவில் புதியதாக HMPV என்ற…

paytm, phonepe, gpay அதிகம் பயன்படுத்துவரா? ஆர்பிஐ எடுக்கும் அதிர்ச்சி முடிவு

Posted by - November 28, 2022 0
3rd Party  UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில்…

இந்த பட்ஜெட் பிரதமர் மோடி எண்ணங்களுக்கு செயல் வடிவம் – முதல்வர் புகழாரம்

Posted by - February 1, 2025 0
விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3. இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும் – முதல்வர் ரங்கசாமி…

சார்ஜ் போடவே வேண்டாம்… ஒளியின் சக்தியில் இயங்கும் வயர்லெஸ் கீபோர்டு அறிமுகம்!

Posted by - September 25, 2025 0
இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *