பிக்பாஸ் டைட்டில் வின்னரானார் அசீம் – குவியும் வாழ்த்து

239 0
அசீம்

அசீம்

அசீமுக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவிக்க மற்றொரு பக்கம் பிக்பாஸ் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டுவருகின்றன.

21 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணி முதல் ஒளிபரப்பாகி வந்தது. கடந்த சீசன்களை போல் இந்த சீசனில் சுவாரசியம் சற்று குறைவாகவே இருப்பதாக ரசிகர்களின் கருத்தாக இருந்துவருகிறது.

சமீபத்தில் விஜே கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ.3 லட்சத்தை எடுத்துகொண்டு வெளியேறினார். அதன் பிறகு நடந்த எவிக்ஷனில் மைனா நந்தினி வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில், விக்ரமன், ஷிவின் அசீம் ஆகிய 3 பேர் மட்டுமே உள்ளனர்.

மூன்று பேருமே கடுமையான போட்டியாளர்கள் என்பதால் வெல்லப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் 6 போட்டியின் வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தில் விக்ரமனும் 3வது இடத்தில் ஷிவினும் இடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மூவருக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக அசீமுக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவிக்க மற்றொரு பக்கம் பிக்பாஸ் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டுவருகின்றன.

Related Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய நடிகர்?

Posted by - April 20, 2023 0
முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.   விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி…

பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் இவர்களா?- வெளிவந்த லிஸ்ட்

Posted by - September 22, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 7வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே நிறைய புதிய…

ஹீரோயின் ஆகும் வனிதாவின் 18 வயது மகள்.. ஹீரோ யார்?

Posted by - August 23, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு மீண்டும் பாப்புலர் ஆகி தற்போது சினிமா, சின்னத்திரை, youtube என பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி…

உங்க வீட்டுல வெண்டைக்காய் சாப்பிடமாட்டாங்களா? இப்படி ப்ரை செய்யுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

Posted by - September 19, 2023 0
காய்கறிகளில் வெண்டைக்காய் வளுவளுப்பாக இருப்பதால், நிறைய பேர் இந்த காய்கறியை சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் வெண்டைக்காய் ஏராளமான சத்துக்களைக் கொண்டது. இதை அடிக்கடி சாப்பிட்டால் பல ஆரோக்கிய…

ஸ்ட்ராபெர்ரி பேஸ் பேக் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்…

Posted by - March 11, 2023 0
ஸ்ட்ராபெர்ரி அனைத்துவிதமான சருமங்களுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. சருமத்துளைகளில் அடங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றவும், முகத்தை சுத்தப்படுத்தவும் சிறப்பாக செயல்படுகிறது. இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *