‘பிச்சைக்காரன்-2’ தடை கோரி மேலும் ஒரு வழக்குப்பதிவு

237 0

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு  தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

சென்னை  உயர்நீதிமன்றத்தில்  ராஜகணபதி என்பவர்  தாக்கல் செய்துள்ள மனுவில் தங்களது  தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது.  அப்படத்தின் கதையை  அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 என்ற படத்தை எடுத்துள்ளதாகவும் எனவே பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.  இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், பரணி என்ற உதவி இயக்குனர் தொடர்ந்துள்ள வழக்கில், தான் அஜித் நடித்த சிட்டிசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளதாகவும், பிச்சைக்காரன் 2 படத்தின் மூலக்கதை தன்னுடைய கதை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கதையை  பல தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்ததாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதே கதையை தற்போது பிச்சைக்காரன் 2 என்ற பெயரில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ளதாகவும் எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு வருகிற செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

பாக்கியலட்சுமி நடிகையின் புது சீரியல்.. டைட்டில் இதுதான்

Posted by - February 23, 2026 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் எவ்வளவு பெரிய ஹிட் என சின்னத்திரை ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த சீரியலில் ஹீரோயின் பாக்யா ரோலில் நடித்தவர் சுசித்ரா. பாக்கியலட்சுமி…

லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 22, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ்காக ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் கார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன்,…

Jailer: ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

Posted by - December 13, 2022 0
ரஜினிகாந்த் – ஜெயிலர் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையில் ஜெயிலர் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை…

அதிரடி ஆக்சன் காட்சிகள்.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் பட ட்ரெய்லர்!

Posted by - September 12, 2024 0
 இந்த படத்தை தயாரித்து, இயக்கி நடித்ததுடன் இசையும் அமைத்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.. நடிகர் ஹிப் ஹாப் தமிழா தயாரித்து இயக்கி நடித்துள்ள கடைசி உலகப் போர்…

ருத்ரன் – திரை பார்வை…

Posted by - April 15, 2023 0
5 ஸ்டார் கதிரேசன் தயாரித்து முதல் முறையாக இயக்கி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ருத்ரன். ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *