பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

205 0

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், எனவே திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், “6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த பேச்சுவார்த்தையில், “எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. முழுக்க முழுக்க நியாயமற்ற பதில் இது. அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாத பதில் இது. ஊழியர்களின் கோரிக்கைகள் எதன் மீதும் இப்போது முடிவு சொல்ல முடியாது என்று அரசு தரப்பும், அமைச்சரும் சொன்னார்கள். அதனை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்.

இந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது. தமிழகத்தில் இருக்கிற எந்த துறையிலும், எந்த பொதுத்துறை தொழிலாளிக்கும் இழைக்கப்படாத அநீதியை போக்குவரத்து தொழிலாளிகளுக்கு இந்த அரசு இழைத்துக்கொண்டே இருக்கிறது. பஞ்ச படியை பொறுத்தவரை எங்களுக்கு அதிகரித்து தர வேண்டும் என்று கேட்கவில்லை, எங்களுக்கு தரவேண்டிய பாக்கியை தான் கேட்கிறோம். எங்களுக்கு அரசு தரவேண்டிய கடன். மற்ற கோரிக்கைகள் எல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம், பஞ்ச படி பாக்கியை மட்டும் கொடுக்க வேண்டும் என்பதேயே இன்றைய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினோம். இதையும் பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார்கள்.

எதுவும் செய்ய முடியாது என முடிவெடுத்து மிகப்பெரிய தவறை அரசு இழைக்கிறது. எனவே, வேலைநிறுத்தத்தை திரும்ப பெற முடியாது. திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். எங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆறு கோரிக்கையில் இருந்து ஒரு கோரிக்கைக்கு வந்தபின்னும்கூட அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இன்று மாலை வரை நேரம் இருக்கிறது. அமைச்சர் எங்களை அழைத்து பேச தயாராக இருந்தால் நாங்களும் தயார். வேலைநிறுத்தம் என்ற தவிர்க்க முடியாத சூழலுக்கு எங்களை அரசு தள்ளியுள்ளது” என தெரிவித்தனர்.

வேலை நிறுத்த பின்னணி: போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. அதற்கடுத்த நாளே அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜன.9-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. பொங்கலுக்குப் பின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், பணிமனைகளில் ஆர்ப்பாட்டம், மக்களை சந்தித்து ஆதரவு கோருதல் என வேலைநிறுத்தத்துக்கான பணிகளை தொழிற்சங்கங்கள் தீவிரப்படுத்தி வந்தன.

 

இதையடுத்து, வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் அறிவுறுத்தினார். இதன்படி உடனடியாக தொழிற்சங்கங்களை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். கடந்த 5-ம் தேதி நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் அகவிலைப்படி உயர்வு வழங்குதல் மற்றும் ஊதிய பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இதுதொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், பேச்சுவார்த்தை நேற்றைய தினத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே, உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கியதால் பேச்சுவார்த்தை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு, இன்றைய தினம் நடைபெற்றது.

Related Post

உஷார்… டெங்கு காய்ச்சலின் இந்த 4 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..

Posted by - September 14, 2023 0
டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே…

ஷவர்மா விற்பனை செய்யும் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன?: அதிகாரி விளக்கம்

Posted by - September 21, 2023 0
கோவை: நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை…

வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய MLA மகன்? பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

Posted by - January 19, 2024 0
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை கொடுமைபடுத்தியதாக கூறி பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல், கதறி அழுத பிரேமலதா.. புகைப்படங்கள் இதோ

Posted by - December 28, 2023 0
விஜயகாந்த் மரணம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் பாதிக்கப்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவமனையில் மரணமடைந்த நடிகர்…

ஆடி கடைசி வெள்ளி… மறந்துடாதீங்க! கண்டிப்பாக இதை செய்யுங்கள்…

Posted by - August 14, 2024 0
ஆடி மாதத்தில் சிறப்புக்குரிய நாட்கள் எத்தனை வந்தாலும் ஆடி வெள்ளிக்கு மட்டும் ஏன் தனி சிறப்புகள் உள்ளன. பல கொண்டாட்டங்களுக்கு பிறகு தற்போது ஆடி மாதத்தின் இறுதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *