போதையால் சீரழிந்த THALAPATHY VIJAY-உடன் நடித்த நண்பன் போதையால் உள்ளே தள்ளிய போலீஸ் – நடந்தது என்ன?

218 0

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின்போது நடிகர் ஸ்ரீகாந்த் போதையில் தகராறில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது:

இதையடுத்து, இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பிரகாஷ் என்பவரிடம் போதைப்பொருள் வாங்கியது தெரியவந்தது. மேலும், அவரது ரத்தமாதிரியை பரிசோதனை செய்ததில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த தகராறில் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் வழங்கியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். போதைப்பொருள் பயன்பாடு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் விசாரணை நடத்தி அவரது ரத்தமாதிரியை பரிசோதனை நடத்தியதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. விசாரணையிலும் தகவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.

பழக்கம் ஏற்பட்டது எப்படி?

இந்த விவகாரத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,  நடிகர் ஸ்ரீசாந்திற்கும், பிரசாத்திற்கும் இடையே கடந்த 5 வருடங்களாக நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிரசாத் பிரபலங்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து அவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதையடுத்து, பிரசாத்தை விசாரித்தால் அவர் எந்தெந்த நடிகர்கள், நடிகைகளுக்கு போதைப்பொருள் வழங்கினார்? என்பது குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2002ம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமானார் ஸ்ரீகாந்த். முதல்படமே மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அடுத்தடுத்து நடித்த ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு படங்கள் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது.

ரசிகர்கள் அதிர்ச்சி:

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் அடுத்தடுத்து நடித்து அசத்தினார். தமிழில் அவர் அடுத்து நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறாத சூழலில், விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் மீண்டும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. ஆனாலும், கதைத்தேர்வில் மிகவும் மோசமாக இருந்ததால் அவர் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்தும் தாேல்விப் படங்களாக மட்டுமே அந்த படங்கள் அமைந்தது.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தினசரி படம் ரசிகர்களால் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது. படத்தின் கதாநாயகி தயாரித்த இந்த படம் ரசிகர்களால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இயக்குனர் ரங்கராஜ் இயக்கத்தில் இவர் நடித்த கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் கடைசியாக இவருக்கு ரிலீசான படம். அந்த படமும் இவருக்கு தோல்வியையே தந்தது.

மிகப்பெரிய நடிகராக வர வேண்டிய ஸ்ரீகாந்த் தொடர் தோல்வி மட்டுமின்றி தற்போது போதை வழக்கிலும் சிக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; கைதானவர் பற்றி பகீர் தகவல்

Posted by - December 25, 2024 0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட நபர் கைது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும்…

”தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்! சாதி வாரி எப்போ நடத்த போறீங்க..” அன்புமணி வார்னிங்

Posted by - February 11, 2025 0
“69 %இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்றால் முதலில் சென்னையில்…

ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்

Posted by - February 20, 2023 0
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம்

Posted by - February 20, 2023 0
மயில்சாமி மறைவு மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம் நடிகர் மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *