மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்

206 0

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இங்கு வன்முறை இன்னும் முழுமையாக ஓயவில்லை.

இந்த நிலையில் உயிரிழப்பு, சேதம் குறித்த தகவல்களை ஐ.ஜி.க்கள் வெளியிட்டுள்ளனர். ஐ.ஜி. (செயல்பாடுகள்) ஐ.கே. முய்வா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மணிப்பூரில் இந்த சவாலான நேரத்தில் காவல்துறை, மத்தியப் படைகள் மற்றும் சிவில் நிர்வாகம் ஆகியவை இயல்பு நிலை திரும்ப 24 மணி நேரமும் முயற்சி செய்து வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க முடியும்.மணிப்பூரில் உக்கிரமடையும் கலவரம்.! தமிழர் பகுதியில் வெடித்த வன்முறை  (காணொளி) - ஐபிசி தமிழ்
வன்முறையின்போது, ஆயுத கிடங்குகளில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுவரை 1,359 துப்பாக்கிகள் மற்றும் 15,050 வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 5,172 தீவைப்பு சம்பங்கள் நடைபெற்றுள்ளன. 254 கிறிஸ்தவ ஆலயங்கள், 132 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பிஷ்னுபுர் மாவட்டம் பௌகாக்சாயோ இகாயில் இருந்து சுரசந்த்புர் மாவட்டம் கங்வாய் வரையிலான பாதுகாப்பு தடுப்புகள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.ஜி. (நிர்வாகம்) கே. ஜெயந்தா கூறியிருப்பதாவது:- 175 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 79 உடல்கள், உறவினர்களால் உரிமைக்கோரப்பட்டுள்ளது. 96 பேர் உடல்கள் உரிமைக்கோரப்படவில்லை. இம்பாலில் உள்ள மருத்துவமனைகளில் 56 உடல்களும், சுரசந்த்புர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 42 பேர் உடல்களும் வைக்கப்பட்டுள்ளது. 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு ஜெயந்தா தெரிவித்துள்ளார். மண்டலம்-3 ஐ.ஜி. நிஷித் உஜ்வால் கூறியிருப்பதாவது:- தேசிய நெடுஞ்சாலை 32, தேசிய நெடுஞ்சாலை 2 ஆகியவற்றில் தற்போது வழக்கமான முறையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

Related Post

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்

Posted by - August 11, 2023 0
திருவனந்தபுரம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய…

ஒரு தக்காளியின் விலை ரூ.17- வைரலான ‘பில்’

Posted by - August 7, 2023 0
இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது. சில இடங்களில் கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை…

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

Posted by - September 25, 2025 0
லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…

மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி

Posted by - June 30, 2023 0
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும்…

முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

Posted by - September 4, 2024 0
பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *