மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டுவோம்! – இபிஎஸ் பிரகடனம் அதிமுகவுக்கு அனுகூலம் சேர்க்குமா?

193 0

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டது அதிமுக அரசு. இதன் தாக்கம் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு தேர்தலில் பெரும் சரிவை உண்டாக்கியதாக அப்போது சர்ச்சைகள் வெடித்தன.

இந்த நிலையில் அதற்கு பரிகாரம் தேடும் விதமாக, “தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டவும் மத்திய அரசை வலியுறுத்துவோம்” என திண்டுக்கல் பிரச்சாரத்தில் திடீர் பிரகடனம் செய்திருக்கிறார் இபிஎஸ். இதுவும் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.இபிஎஸ்​ஸின் இந்த அறி​விப்​புக்கு தேவரின அமைப்​பு​கள் பாராட்டு தெரி​வித்து வரவேற்​றுள்​ளன. இதனால் கலவரப்​பட்ட அமமுக பொதுச்​செயலாளர் டி.டி.​வி.​தினகரன், ‘‘தென் மாவட்​டங்​களில் ஒற்​றுமையை குலைக்​கும் வகை​யில் இபிஎஸ் இந்த வெற்று வாக்​குறு​தியை தந்​துள்​ளார்” என்​றார். தினகரனின் இந்​தக் கருத்தை அவருக்கு எதி​ராகவே திருப்​பி​விட்ட அதி​முக-​வினர், “தேவ​ருக்கு பெருமை சேர்ப்​பது தினகரனுக்கு பிடிக்​க​வில்​லை” என கொளுத்​திப் போட்​டனர்.இதனால் மேலும் பதற்​ற​மான தினகரன், “2021 சட்​டமன்ற தேர்​தலின் போது, தேவர் திரு​மக​னாரின் பெயரை மதுரை விமான நிலை​யத்​திற்கு வைக்க வேண்​டும் எனவும் தேவர் திரு​மக​னாருக்கு பாரத ரத்னா விருது வழங்​கப்பட வேண்​டும் எனவும் நாங்​கள் தேர்​தல் வாக்​குறு​தி​யிலேயே சொல்லி இருக்​கி​றோம்” என தனி​யாக பிரஸ் மீட் போட்டு தன்​னிலை விளக்​கம் கொடுத்​தார்.

மதுரை விமான​நிலை​யத்​துக்கு தேவர் பெயர் சூட்ட வேண்​டும் என்ற கோரிக்​கை​யானது சுப்​பிரமணி​யன் சுவாமி மதுரைக்கு எம்​பி-​யாக இருந்த காலத்​தி​லிருந்தே விவாதத்​தில் இருக்​கிறது. இருப்​பினும், அண்​மைக் காலத்​தில் இதுகுறித்து யாரும் பேசாத நிலை​யில், தேர்​தல் சமயத்​தில் தேவரின மக்​களின் அபி​மானத்​தைப் பெறு​வதற்​காக இபிஎஸ் திடீரென தேவர் பெயரை தூக்​கிப் பிடித்​திருப்​பது, அதி​முக-வை ஆதரிக்​கும் பட்​டியலின மக்​கள் மத்​தி​யில் அதி​முக-வுக்கு எதி​ரான சிந்​தனையை விதைக்​கக் கூடும் என்​கி​றார்​கள்.

அதற்​கேற்ப இபிஎஸ்​ஸின் கருத்​துக்கு உடனே ரியாக்​‌ஷன் காட்​டிய புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி, “தேர்​தல் நேரத்​தில் ஆளுங்​கட்​சி​யின் குறை​கள், மக்​கள் பிரச்​சினை​களை சுட்​டிக்​காட்​டித்​தான் பிரச்​சா​ரம் செய்​ய​வேண்​டும். ஆனால், அதைப் பற்​றியெல்​லாம் பேசாமல் சம்​பந்​தமில்​லாமல் ஏற்​கெனவே முடிந்​து​போன விஷ​யத்​தைப் பற்றி பழனி​சாமி பேசி இருக்​கி​றார்.

மறைந்த தலை​வர்​களின் பெயர்​களை மாவட்​டம், போக்​கு​வரத்து கழகங்​களுக்கு வைக்​கக்​கூ​டாது என்ற அரசாணை அமலில் இருக்​கும்​போது, தற்​போது மதுரை விமான நிலை​யத்​திற்கு தலை​வர் ஒரு​வரின் பெயரை வைப்​பது குறித்து யாருடைய தூண்​டு​தலின் பெயரிலோ பழனி​சாமி பேசி இருக்​கி​றார்” என்​றார்.

இது தொடர்​பாக நம்​மிடம் பேசிய தென்​னிந்​திய ஃபார்​வர்டு பிளாக் கட்​சி​யின் தலை​வர் கே.சி.​திரு​மாறன், “மதுரை விமான நிலை​யத்​திற்கு தேவர் பெயரைச் சூட்ட வேண்​டும் என்ற கோரிக்கை 1996-லிருந்தே இருக்​கிறது. தாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் விமான நிலை​யத்​திற்கு தேவர் பெயரை சூட்ட நடவடிக்கை எடுப்​போம் எனச் சொல்லி இருந்​தார் ஸ்டா​லின். ஆனால், அதற்​கான எந்த முயற்​சி​யை​யும் அவர் எடுக்​க​வில்​லை.

அதனால் அதி​முக மீது நம்​பிக்கை வைத்​து, விமான நிலை​யத்​துக்கு தேவர் பெயரை வைக்​க​வும், தேவ​ருக்கு பாரத ரத்னா விருது வழங்​க​வும் மத்​திய அரசை வலி​யுறுத்த வேண்​டும் என இபிஎஸ்​ஸிடம் கோரிக்கை வைத்​தோம். அதை ஏற்றே அவர் தற்​போது வாக்​குறுதி அளித்​துள்​ளார். அவரது இந்த அறி​விப்​பால் தென் மாவட்​டத்​தில் அதி​முக கடந்த தேர்​தலில் இழந்த செல்​வாக்கை இம்​முறை மீட்​டெடுக்​கும்” என்​றார்.

வன்​னியருக்கு உள் இடஒதுக்​கீடு வழங்​கப்​பட்ட விவ​காரத்​துக்கே ஆண்​டு​கள் ஐந்​தாகி​யும் இன்​னும் விடை தெரிய​வில்​லை. இந்த நிலை​யில் புதி​தாக இன்​னொரு சர்ச்​சைக்கு பூஜை போட்​டிருக்​கிறார் இபிஎஸ்​!

Related Post

திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

Posted by - March 15, 2026 0
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை…

‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு

Posted by - January 16, 2026 0
மேட்டூர்: “எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி…

ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

Posted by - March 31, 2026 0
விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். விஜயை காணும் பொருட்டு வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொளத்தூரில் திரண்ட மக்கள் கூட்டம் அச்சத்தை…

எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!

Posted by - February 9, 2026 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தலைவர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.…

“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

Posted by - March 27, 2026 0
சென்னை: “நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *