மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்

282 0

ராமேசுவரம்:

தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்களின் படகுகளின் பாதுகாப்பு கருதி துறைமுகங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் திடீரென உள்வாங்கிய கடல் - தரை தட்டி நின்ற  நாட்டுப் படகுகள் | Rameswaram and Pampan areas suddenly engulfed in the sea  - hindutamil.in

இந்நிலையில், தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கரையோரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மணலில் சிக்கிக்கொண்டது. இதனை மீட்க முடியாத நிலையில் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலையில் கடல் நீர்மட்டம் உயர்ந்தவுடன் தான் படகை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவித்தனர். இதேபோல் தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்று காரணமாக அரிச்சல்முனை-தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

Related Post

பிறந்தது டிசம்பர்… இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வர உள்ள புதிய விதிகள்.!

Posted by - December 1, 2022 0
பலர் தங்களது முக்கியமான பணிகளை அடுத்த மாதம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி…

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

Posted by - April 17, 2023 0
மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க,…

ஒரு வயது குழந்தைக்கு அரிய வகை நோய்: சிகிச்சை செலவுக்காக ரூ.17½ கோடி உதவியை நாடும் பெற்றோர்

Posted by - July 29, 2023 0
சென்னை: சென்னை சேலையூரில் வசித்து வருபவர் ஆகாஷ் மிஸ்ரா. ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கு ஒரு வயதில் சிவான்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை…

யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

Posted by - January 6, 2025 0
பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில்…

கமலின் இழிவான அரசியல், விஜய் ஒரு பொடிசு.. கடுமையாக சாடிய இயக்குனர்

Posted by - August 29, 2024 0
அரசியல் ஆசை பலருக்கு இருந்தாலும் பெரும்பாலும் நடிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், சீமான் தற்போது விஜய் என சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் களம் காண்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்கள் மார்க்கெட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *