”மாட்டிக்கிட்ட” பொய்யா சொல்றியே பங்காளி..! பாக்., எப்படிலா உருட்டி இருக்கு பாரேன்..!

237 0

பஹல்காம் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தானை நம்ப முடியாததற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் உலக நாடுகளுக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது.

”நோ” சொன்ன பாகிஸ்தான்:

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது. அதன்படி, இந்தூஸ் நீர் ஒப்பந்தம், விசா ரத்து, அட்டாரி – வாகா எல்லை மூடல், தூதரக் மூடல் என பாகிஸ்தானிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே, அதற்கு தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் விளக்கமளித்தது. ஆனாலும், அதை ஏற்க மறுத்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்நாட்டின் மறுப்பை  இந்தியா ஏற்காததற்கு கடந்த காலத்தில் நாம் கற்ற பாடங்களே காரணமாகும்.

மும்பை தாக்குதல் – 2008

இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத தீவிரவாதிகள் தாக்குதலான மும்பை தாக்குதலின்போதும், அதற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்தது. ஆனால், உயிரோடு பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப் நீதிமன்றத்தில் வாயை திறந்தபிறகு, அவர் பாகிஸ்தானின் பஞ்சாபில் பிறந்தவர் என்பது உறுதியானது. சொந்த விசாரணையின் முடிவில், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டுமே தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் என பாகிஸ்தான் அரசே அறிவித்தது. மேற்கத்திய உளவுத்துறை நடத்திய விசாரணையில் நிதி, பயிற்சி ஆகியவற்றில் லஷ்கர்-இ-தொய்பாவின் பங்களிப்பும் அம்பலமானது.  தற்போதும் அதே அமைப்பு தான் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற பெயருக்கு பின்னாள் ஒளிந்து இருப்பதாக இந்தியா சந்தேகிக்கிறது.

கார்கில் போர் – 1999

1999 கார்கில் போரின் போது, ​​இமயமலை முகடுகளில் நுழைந்தவர்கள் காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுபவர்களே, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் சத்தியம் செய்தது. ஆனால் கடந்த செப்டம்பரில் இந்த சம்பவம் குறித்து பேசிய தற்போதைய பாகிஸ்தான் ராணுவ தளபதி, “கார்கில் சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்தியது தங்கள் ராணுவம் தான்” என பேசியுள்ளார்.

ஒசாமா பின்லேடன் தலைமறைவு

இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தனது பிரதான எதிரியாக அறிவித்து தேடி வந்தது. ஆனால், அவர் தங்கள் நாட்டில் இல்லை என பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து வந்தது. இந்த சூழலில் தான் அபோதாபாத்தில் உள்ள பாக்கிஸ்தானின் ப்ரீமியர் மிலிட்டரி அகாடெமியிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு பாதுகாப்பான வீட்டில் வைத்து ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது. இதனால், மீண்டும் பாகிஸ்தானின் முகத்திரை சர்வதேச அளவில் கிழிந்தது.

இனப்படுகொலை – 1971

தற்போது வங்கதேசம் என அடையாளம் கணப்படும் கிழக்கு பாகிஸ்தான், முன்பு பாகிஸ்தானுடன் இணைந்து இருந்தது. தங்களுக்கு தனி நாடு வேண்டுமென போராட்டம் வெடித்தபோது, வங்கதேச மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் லட்சக்கணக்கான வங்கதேச மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் . ஆனால், தற்போது வரை பாகிஸ்தான் ராணுவம் அதனை மறுத்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தான், பஹல்காம் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், அதனை இந்தியா ஏற்பதாக இல்லை.

Related Post

சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!..

Posted by - May 22, 2024 0
நோய் வருவதும், அதைக் குணப்படுத்துவதும், சாதாரண மருத்துவ நிகழ்வுதான் என்றாலும், அந்த நோய் தொற்று நோயாக இருக்கும் பட்சத்தில், அது பரவாமல் தடுப்பது மிகவும் முக்கியமானது. புதுவகையான…

சிம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. வருகிறது E-Sim.. ஆண்ட்ராய்டு போன் வைத்து உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Posted by - January 19, 2023 0
Android 13 | இவை சாத்தியமானால், நிறுவனம் தனது செயல்பாட்டில் துரிதமாக எந்த தடை மற்றும் தாமதமின்றி செயல்பட வேண்டும். இதற்கு ஆப்பிள் நிறுவனமே மிகப்பெரிய உதாரணம்!…

இன்று உலக கிறிஸ்துமஸ் திருநாள்- ஒரு பார்வை

Posted by - December 25, 2023 0
உலகம் முழுவதும் மிகவும் ரசிக்கப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்றாகும். இந்த நாள் மகிழ்ச்சியையும் அன்பையும் குறிக்கிறது. எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அனைவராலும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.…

178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம்

Posted by - October 14, 2023 0
வாஷிங்டன்: சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது…

உலகின் நம்பர் 1 தீவிரவாத நாடு பாகிஸ்தான்..அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ரிலீஸ் – மனுஷங்களா நீங்களா?

Posted by - March 23, 2026 0
கடந்தாண்டு உலகத்திலே அதிகளவு தீவிரவாத சம்பவங்கள் பாகிஸ்தானில் நடந்துள்ளது. இதனால், 1139 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பது தீவிரவாதம். பல்வேறு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *